தத்துவம் மச்சி தத்துவம்... விடுதலை 2ல பெரிய டிராபேக் இதுதானா?
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி நடித்த படம் விடுதலை 2. இன்று வெளியான இப்படத்திற்கு பாசிடிவ்வான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. படம் என்று இருந்தால் அதில் நிறை, குறைகள் இல்லாமல் இருக்காது. இந்தப் படத்தில் பல பாசிடிவ் விஷயங்கள் இருந்தாலும் ஒரு சின்ன குறையும் தென்படுகிறது என்கிறார் பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு. அவர் என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...
விடுதலை 2 பார்க்குறதுக்கு முன்னாடி விடுதலை 1 படத்தைப் பார்த்துருங்க. விடுதலை 1ல விஜய்சேதுபதியை கைது பண்ணிடுறாங்க. யார் அவர்? பள்ளிக்கூட வாத்தியாரா? அவர் எப்படி பொதுவுடைமை பேசக்கூடிய நபர் ஆனார்? மார்க்சிஸியம், கம்யூனிஸம் பேசி அவர் எப்படி ஒரு குழுவின் தலைவராக மாறுகிறார். அவர் எப்படி கைதாகிறார்? அதுக்கு அப்புறம் எப்படி போலீஸ் கொண்டு போய் டீல் பண்றாங்க? இதுதான் பார்ட் 2.
முதல் பாகத்தில் சூரியை மிகத்தெளிவாக வெற்றிமாறன் பயன்படுத்தி இருந்தார். 2ம் பாகத்தில் படம் முழுக்க விஜய்சேதுபதி தான் வருகிறார். படம் ரெண்டே முக்கால் மணி நேரம் ஓடுகிறது. அதுல 8 நிமிடங்கள் கட் பண்ணியிருக்காங்க.
ஸ்ரீதர், கே.பாலசந்தர், மகேந்திரன், பாரதிராஜா என இயக்குனர்கள் வரிசையில் வெற்றிமாறனும் சேர்ந்துவிட்டார். ஏனென்றால் இந்த இயக்குனர்களுக்கு என ரசிகர்கள் படம் பார்க்க வருகிறார்கள். வெற்றிமாறனின் திரை ஆளுமைதான் இதற்குக் காரணம்.
விஜய் சேதுபதியின் கதை சொல்லலில் இருந்துதான் படம் தொடங்குகிறது. பாமர மக்கள் கொத்தடிமைகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு விழிப்புணர்வைத் தரும் பெருமாள் வாத்தியாராக விஜய் சேதுபதி வருகிறார். முதல் பாதி படத்தில் பெரிய தொய்வைத் தருகிறது என்றே சொல்லலாம்.
ஆனால் ஏதோ சொல்ல வருகிறார் என்று மட்டும் தெரிகிறது. அசுரன் மாதிரி சொல்வார் போல எனத் தோன்றுகிறது. இடைவேளைக்குப் பிறகு என்ன சொல்லப் போறாங்கன்னா அதுக்குள்ள விஜய்சேதுபதியை கைது பண்ணிடுறாங்க. அதுக்கு அப்புறம் அரசு என்ன செய்கிறது? போலீஸ்சுக்கும், குழுத்தலைவனுக்குமான உரையாடல், ஒரு பயணம் அதன் முடிவு எப்படி என்பதுதான் கதை.
வெற்றிமாறன் ஆடியன்ஸை எங்கேயாவது ஒரு இடத்தில் கனெக்ட் பண்ணிருவாரு. இது எங்கேயோ மிஸ் ஆகியிருக்கோன்னு தோணுது. ஆனால் விஜய்சேதுபதி படத்தில பொதுவுடைமை பற்றி நிறைய பேசிக்கிட்டே இருக்காரு. இன்றைய இளம் ரசிகர்கள் வெற்றிமாறனுக்கு பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு தத்துவத்தையும், போதனைகளையும் சொல்லும்போது ஒரு கட்டத்தில் போரடித்து விடுகிறது.
நிறைய கேரக்டர்களை வெற்றிமாறன் பயன்படுத்திருக்காரு. அவரு எல்லாப் படங்களிலும் எந்தக் கேரக்டரையும் வீணடிக்க மாட்டாரு. இந்தப் படத்திலும் விஜய்சேதுபதி, சூரி, கௌதம் மேனன், ராஜீவ் மேனன், இளவரசு, ஜெய்வந்த்னு சொல்லிக்கிட்டே போகலாம்.
நேர்த்தியான திரைக்கதையை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பவர் வெற்றிமாறன். ஆனால் விடுதலை 2ல ஏதோ ஒரு கட்டத்தில் மிஸ் பண்ணிட்டாரு. இதுல ஏதாவது ஒரு டுவிஸ்ட் இருக்கும்னு பார்த்தா அப்படியே போய்க்கிட்டே இருக்கு. ஒரு தலைவன் இருக்காருன்னா மக்களோட கஷ்டத்தை சொல்லியே ஆகணும். அதை ஏன் வெற்றிமாறன் இதுல சொல்லல. முதல் பாகத்துல சொல்லிருப்பாரு. ஆனால் இதுல அதைத் தொடரவில்லை. அவரது போகஸ் முழுவதும் பெருமாள் வாத்தியார் மேலதான் போகிறது.
அரசுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்களை அரசு தன் சுண்டுவிரலால் நசுக்கி விடும் என்பதையே மையமாக வைத்து உரையாடல்கள் இருக்கும். இளையராஜா தன் பங்கைக் கரெக்டா பண்ணிருக்காரு. பின்னணியை இன்னும் கொஞ்சம் சூப்பரா பண்ணிருக்கலாம்னு தோணுது.
மஞ்சுவாரியார் என்ன ஆகுறாங்கன்னு திடீர்னு தெரியாமப் போயிடுது. கிளைமாக்ஸ்ல படத்துல சூரி நான்தாங்க ஸ்டார்னு ஒரு சம்பவம் பண்றாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.