மகாராஜா படம் போல மாஸ் காட்டியதா?.. விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ படம் எப்படி இருக்கு?.. விமர்சனம் இதோ!..

by SARANYA |
மகாராஜா படம் போல மாஸ் காட்டியதா?.. விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ படம் எப்படி இருக்கு?.. விமர்சனம் இதோ!..
X

நடிகர் விஜய் சேதுபதி அதிகமாகவே சீரியஸான படங்களில் தான் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த ஜானரை விட்டு நாமும் கொஞ்சம் ஜாலியாகவும் சிரித்துக் கொண்டே பார்க்கும் படியான படத்தைக் கொடுக்கலாம் என்கிற நினைப்புடன் தான் இப்படியொரு படத்தில் ஓகே சொல்லி நடித்திருக்கிறார் என்று தெரிகிறது.

மத கஜ ராஜா போல ஒரு 10 வருஷத்துக்கு முன்னாடி இதுபோன்ற கதைகளில் ஹெய்ஸ்ட் படங்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில், வெளியான சுந்தர். சி, வடிவேலு நடித்த ஹெய்ஸ்ட் படம் கூட கதைப்படி நல்லாவே எழுதப்பட்டு இருந்தது.

அந்த படத்திலேயே காமெடிக்கு வடிவேலு ரொம்பவே மெனக்கெட்டும் ரசிகர்களால் சிரிக்கத்தான் முடியவில்லை. ஆனால், அந்த விஷயத்தை யோகி பாபு இந்த படத்தில் சர்வ சாதாரணமாக செய்துக் காட்டியிருக்கிறார்.


இந்த வாரம் அவர் ஹீரோவாக நடித்த ஸ்கூல் படத்தை விட ரசிகர்கள் பலரும் ஏஸ் படத்தை தான் பார்த்து கொண்டாடுவார்கள் என தாராளமாக சொல்லலாம். கடந்த வாரம் வெளியான சந்தானம் படமான டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் கூட இந்த அளவுக்கு காமெடி டைமிங் எல்லாம் வொர்க்கவுட் ஆகவில்லை.

ஆனால், ஏஸ் படத்தில் பெரிய பிரச்னையே படத்தின் மேம்போக்கான கதைக்களம் தான். விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், திவ்யா பிள்ளை, பப்லு பிரித்விராஜ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஆறுமுக ராஜா தயாரித்து இயக்கியுள்ளார்.

ஆளு கொஞ்சம் வெயிட் பார்ட்டி போல தெரிகிறது, மொத்த படத்தையும் மலேசியாவிலேயே படமாக்கியுள்ளார். முடிந்தவரை படம் பார்க்க செல்லும் ரசிகர்களுக்கு மலேசியாவை சுற்றிக் காட்டி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

கதைப்படி பார்த்தால், துணிக்கடையில் வேலை செய்யும் காதலிக்காக 10 ஆயிரம் வெள்ளியில் ஒரு டிரெஸ் வாங்க யோகி பாபுவ்டன் சேர்ந்து தர்மராஜ் என்கிற டானிடம் கடன் வாங்க செல்கிறார் விஜய் சேதுபதி. அங்கே அவர், சூதாட்டம் மூலமாக பெரிய தொகையை சம்பாதிக்க நினைக்கிறார். விஜய் சேதுபதி ’ஏஸ்’ மூலமாக ஜெயித்துக் கொண்டிருப்பதை பார்த்து அவரை ஏமாற்றி வில்லன் ஜெயித்து விடுகிறார்.

மேலும், தான் கொடுத்த கடனை ஒரு வாரத்தில் கட்டவில்லை என்றால் கொன்று விடுவேன் என மிரட்டுகிறார். தனது அம்மாவின் இரண்டாவது கணவரான பப்லு பிரித்விராஜ் போலீஸாக இருந்தாலும் மோசமான பெண் பித்தன். அவனிடம் இருந்து தன்னையும் வீட்டையும் காப்பாற்ற போராடும் ஹீரோயினுக்காகவும் சூதாட்டத்தில் தோற்று கடனாளியாக மாறி பெரிய பிரச்னையில் சிக்கிக் கொண்டிருப்பதையும் சமாளிக்க விஜய் சேதுபதி என்ன செய்தார் என்பதே கதை.

விஜய் சேதுபதியின் லுக், ஹீரோயின் ருக்மணி வசந்தின் நடிப்பு, யோகி பாபுவின் டைமிங் காமெடி எல்லாம் நல்லா வொர்க்கவுட் ஆகியிருக்கிறது. படத்தின் கதை இன்னமும் வலுவாக இருந்திருந்தால் படம் பெரிய ஹிட்டாக அமைந்திருக்கும்.

Next Story