கைவிட்ட ராம்சரண்... ஜூனியர் என்டிஆரை காப்பாற்றிய ஹிரித்திக் ரோஷன்... எப்படி இருக்கு வார்2 டீஸர்!

by AKHILAN |
கைவிட்ட ராம்சரண்... ஜூனியர் என்டிஆரை காப்பாற்றிய ஹிரித்திக் ரோஷன்... எப்படி இருக்கு வார்2 டீஸர்!
X

War2: பிரபல இந்தி நடிகர் ஹிரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் கூட்டணியில் உருவாகி இருக்கும் வார்2 படத்தின் டீஸர் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்தியில் ஹிரித்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராப் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆக்ஷன் படமான வார் படத்தின் தொடர்ச்சியாக தயாராகி வருகிறது வார் 2. ஆயன் முகர்ஜி டைரக்ட் பண்ற இந்தப் படம், யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் ஸ்பை யூனிவர்ஸில் 6வது படமாக அமைந்துள்ளது.

கியாரா அத்வானி ஹீரோயினாக நடிச்சிருக்காங்க. 6 நாடுகளில், 150 நாட்கள் எடுக்கப்பட்ட ஷூட்டிங்களும் ஃபுல் ஆக்ஷனும், ஸ்டைலான ஸ்டண்டுகளுடன் கலக்கப்போவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஸ்பை ஆக்ஷனில், என்டிஆர் வில்லனாக பவர் பஞ்ச் கொடுக்க வருகிறார்.

சமீபகாலமாகவே ஜூனியர் என்.டிஆர். எல்லா மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். அந்த வகையில் அவரின் அடுத்த திரைப்படமாகி இருக்கும் வார் 2 படத்தில் டீசர் இன்று அவர் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி இருக்கிறது.

வெளியாகி இருக்கும் டீசரில் ஹிரித்திக் ரோஷன் மாஸ் காட்டி இருப்பது மட்டுமல்லாமல் சம பங்காக வில்லன் ஜூனியர் என்.டி.ஆருக்கு இடம் கொடுத்து இருக்கிறார். முதல் பாகத்தின் கபீர் கேரக்டரிலேயே ஹிரித்திக் ரோஷன் நடிக்க இருக்கிறார்.




இருவருக்கான சண்டை காட்சிகளும், வித்தியாசமான இடங்களும் வாவ் சொல்ல வைக்கிறது. ஆர்ஆர்ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆரை விட ராம்சரணுக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. ஆனால் வார்2ல் இவருக்கு சம முக்கியம் கொடுத்திருப்பது பாராட்டுக்களை பெற்றுள்ளது.

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழியில் வெளியாகப்போகும் இப்படம் ஆகஸ்ட் 14ந் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வாரத்தில் கூலி படமும் ரிலீஸாவதால் இந்த ரேஸில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் இருக்கிறது.


Next Story