Categories: latest news reviews

Bison: பிரதீப் ரங்கநாதனுக்கு விபூதி அடித்த துருவ்… முந்தி செல்லும் பைசன்!… சோலி முடிஞ்சிச்சு!

Bison Movie Review: மாரி செல்வராஜ் இயக்கத்தில் இன்னும் ஒரு முக்கிய படைப்பாக இன்று வெளிவந்திருக்கிறது பாய்சன் திரைப்படம். இன்று அதிகாலையில் இருந்து இப்படத்திற்கு தொடர்ச்சியாக பாசிட்டிவ் விமர்சனங்களே வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய போராட்டங்களுக்கு இடையே தனக்கான ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர் நடிகர் விக்ரம். அவர் தன்னுடைய மகன் துருவை நடிகராக சினிமாவிற்குள் அழைத்து வந்தார். முதல் சில படங்கள் துருவிற்கு நல்ல வரவேற்பை கொடுக்கவில்லை. 

அந்த வகையில் பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது நடித்திருக்கும் பைசன் இன்று உலகம் எங்கும் வெளியாகி இருக்கிறது. தீபாவளி ரிலீஸ் பிரதீப் ரங்கநாதனின் டியூட் மற்றும் ஹரிஷ் கல்யாணி டீசல் திரைப்படங்களுக்கிடையே பைசன் முன்னிலை வகிப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.

தற்போது இப்படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் வைரலாகி வரும் நிலையில் தமிழகத்தின் துணை முதல்வரும், பிரபல ரெட் ஜெயிண்ட் நிறுவனத்தின் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருப்பது, பைசன் திரைப்படத்தை பார்த்தேன். மாரி செல்வராஜ் மீண்டும் ஒரு சக்தி வாய்ந்த படத்தை கொடுத்திருக்கிறார்.

நெருக்கப்பட்ட சமூகத்திலிருந்து அர்ஜுனா விருது வாங்கிய கபடி வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. துருவ் மற்றும் மற்ற நடிகர்கள் படத்திற்கு தேவையான வகையில் நடித்த அசத்தியிருக்கின்றனர் என குறிப்பிட்டு இருக்கிறார்.

இன்னும் ஒரு ட்விட்டரில் முதல் பகுதி ஓகே ரகமாக இருந்தாலும் இரண்டாவது பகுதி படத்திற்கு சரியாக பயன்பட்டு இருக்கிறது. பசுபதி, அமீர் மற்றும் லால் உள்ளிட்டோர் நன்றாக நடித்துள்ளனர். பாடலும் படத்திற்கு வலு சேர்த்து இருக்கிறது.

கதை சொல்வதில் மாரி செல்வராஜ் மாஸ்டர் ஆக செயல்பட்டு இருக்கிறார். ஒரு வலுவான விளையாட்டுகளை சாதி, அரசியல். இடையில் போராடும் நிகழ்வை சரியாக கையாண்டு இருக்கிறார். படத்தில் கபடி காட்சிகள் நல்ல வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

கபடி வீரரின் வாழ்க்கையை அடிமட்டத்திலிருந்து மாரி செல்வராஜ் சரியாக சொல்லி இருக்கிறார்.  மீண்டும் சாதி போராட்டம் சொல்லப்பட்டிருந்தாலும் இங்கு மற்ற சாதிகள் பைசனுக்கு உதவுவது போல காட்சிகள் அமைத்திருக்கிறார். சமூகத்தையும் விளையாட்டையும் சரியாக பிணைத்து இருக்கிறார்.

Published by
ராம் சுதன்