மொக்க படத்தை எடுக்க இவ்வளவு செலவா?.. டீசலை பங்கம் செய்த ப்ளுசட்டை மாறன்

Published on: December 5, 2025
---Advertisement---

தீபாவளியையொட்டி நேற்று 4 படங்கள் வெளியாகின. அதில் லப்பர் பந்து வெற்றியை அடுத்து ஹரிஷ் கல்யாண்  நடிப்பில் டீசல் படமும் ஒன்று. சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படம் படுசுமாரான வரவேற்பையே பெற்றுள்ளது. 

வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் ஹரிஸ் கல்யாண் முக்கியமானவர். சிந்து சமவெளி என்ற மோசமான படத்தில் அறிமுகம் ஆனாலும் பின்னர் நிதானமாக நல்ல கதை அம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்தார். பியார் பிரேமா காதல், இஸ்பேடு ராஜாவும் இதய ராணி, தாராள பிரபு, பார்க்கிங் மற்றும் லப்பர் பந்து என வரிசையாக ஹிட்களை கொடுத்தார்.

blue sattai maran

இந்த நிலையில் நேற்று வெளியான டீசல் படம் குறித்த விமர்சனத்தை ப்ளுசட்டை மாறன் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், 

இயக்குனர் சண்முகம் முத்துசாமி வட சென்னை பகுதியில் குருடாயில் திருடும் உண்மை சம்பவத்தை வைத்து இந்தப் படத்தை எடுத்துள்ளார். ஆனால் முதல் 20  நிமிடங்களிலேயே படம் சரியில்லை என்பது தெரிகிறது .  2 கோடி குருடாயிலை குட்டி யானையில் வைத்து ஹீரோ கடத்துகிறார்.இதுவே மிகப்பெரிய நகைச்சுவையாக இருக்கிறது. வருகிற கேரக்டர்  எல்லோரும் 8 பக்க வசனம் பேசுகிறார்கள். படத்திற்காக நிறைய செலவு பண்ணியிருக்கிறார்கள். ஆனால் கஷ்டப்பட்டு மொக்கை படத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment