Middle Class: டூரிஸ்ட் ஃபேமிலிக்கு அடுத்து செலிபிரேட் பண்ணக் கூடிய படம்… ‘மிடில் கிளாஸ்’ படத்தின் விமர்சனம்

Published on: December 5, 2025
---Advertisement---

முனிஷ்காந்த் விஜயலட்சுமி நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் திரைபப்டம் மிடில் கிளாஸ். இந்தப் படத்தை  கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியிருக்கிறார். ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்துக்கு ஒரு கோடி செக் கிடைக்கிறது. பின் அது காணாமல் போனால் அடுத்து என்ன நடக்கும் என்பதுதான் இந்தப் படத்தின் கரு. படத்தில் விஜயலட்சுமியும் முனிஷ்காந்தும் அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

munish

படத்தின் புரோமோஷனுக்காக படக்குழு ஊர் ஊராக சென்று படத்தை புரோமோட் செய்து வந்தனர். இதுவரை இந்தப் படத்திற்கு பாசிட்டிவான ரெஸ்பான்ஸே வந்து கொண்டு வருகிறது. படத்தை பார்த்த பலரும் மிடில்கிளாஸ் படத்தை பற்றி எக்ஸ் தள பக்கத்தில் விமர்சித்து கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். படத்தில் அமைந்த பாடல்கள், பெர்ஃபார்மன்ஸ், ஸ்டோரி மிகவும் நன்றாக இருக்கிறது. 

munish

 நல்ல விஷுவல், கிளீனான காமெடி. ஒரு ஃபீல் குட் மூவியாக உருவாகியிருக்கிறது. ஒவ்வொருவரும் படத்தை பார்த்து என்ஜாய் பண்ணுங்கள் என்று பதிவிட்டிருக்கின்றனர். படத்தை பார்த்துவிட்டு வரும் போது ஒரு வித பாசிட்டிவ் ஃபீல் கிடைக்கும். குடும்பத்தோடு படத்தை பாருங்கள், கிஷோர் முத்துராமலிங்கள் ஸ்கிரிப்ட், சொல்ல வரும் கருத்துகள் பக்கா.

முனிஷ்காந்தும் விஜயலட்சுமியும் ஒரு முழுமையான வெற்றியாளர்கள். படத்தின் முதல் பாதி மிகவும் காமெடியாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் ஒரு ஸ்ட்ராங்கான எமோஷனலுடன் கூடிய கருத்தை சொல்லியிருக்கிறார்கள். ஒரு முழுமையான குடும்பத்துடனும் நண்பர்களுடனும் பார்க்க வேண்டிய படம்.  நல்ல பாடல்கள் அமைந்துள்ளன,

munish

இந்த வருடம் ரிலீஸான படங்களில் மிடில் கிளாஸ் படம் பட்ஜெட்டிலும் சரி. கதையிலும் சரி. அசத்தியிருக்கிறது. ஃபேமிலி ஆடியன்ஸை முழுமையாக ஈர்க்கக் கூடிய எல்லா அம்சங்களும் இந்தப் படத்தில் இருக்கின்றன. இந்தப் படத்தில் முனிஷ் காந்த் ஏற்று இருக்கும் கேரக்டர் மாதிரி நாம் நிஜ வாழ்க்கையில் பார்த்திருக்கிறோம். அதை போல் விஜயலட்சுமி ரோலும் அனைவராலும் பாராட்டப்படுகிறது.

இதில் ராதாரவிக்கும் ஒரு முக்கியமான கேரக்டர். கிஷோர் முத்துராமலிங்கம் திரைக்கதையில் பின்னி விட்டார். கிளைமாக்ஸில் நம் கண்களில் கண்ணீர் வரவழைத்துவிட்டார் கிஷோர் என படம் பார்த்தவர்கள் இதுவரை பாசிட்டிவான விமர்சனத்தையே முன் வைத்து வருகின்றனர். 

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment