Categories: reviews

Revolver Rita: துப்பாக்கியை கையில் எடுத்த கீர்த்தி சுரேஷ்!.. ரிவால்வர் ரீட்டா பட விமர்சனம்!…

ஜே.கே சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்து இன்று வெளியாகியுள்ள திரைப்படம் ரிவால்வர் ரீட்டா. நயன்தாராவின் கோலமாவு கோகிலா படம் போல ஒரு டார்க் காமெடி திரில்லர் படமாக ரிவால்வர் ரீட்டாவை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த படத்தில் ராதிகா சரத்குமார், ரெடின் கிங்ஸ்லி, சூப்பர் சுப்பராயன், சுனில், செண்ட்ராயன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் விமர்சனத்தை பார்ப்போம்.

படத்தின் கதை: புதுச்சேரியில் அம்மா ராதிகாவுடன் அமைதியாக வாழ்க்கை வாழ்ந்து வரும் கீர்த்தி சுரேஷின் வீட்டில் திடீரென டிராகுலா பாண்டியன் என்கிற ரவுடி இறந்து கிடக்கிறார். அவரை யார் கொன்றார் என தேடும் அவரின் மகன் சுனில் பல ரவுடிகளையும் கொல்கிறார்.  கீர்த்தி சுரேஷின் குடும்பத்தையும் அவர் விரட்ட அதிலிருந்து கீர்த்தி சுரேஷ் குடும்பம் எப்படி தப்பித்தது என்பதுதைதான்  டார்க் காமெடி கலந்து ஒரு ஜாலியான பொழுதுபோக்கு படமாக கொடுத்திருக்கிறார்கள்.

கோலமாவு கோலமாவு கோகிலா போலவே பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை கீர்த்தி சுரேஷ் தனது தோளில் சுமந்து நடித்திருக்கிறார். ரீட்டாவாக வரும் கீர்த்தி சுரேஷின் அம்மாவாக வரும் ராதிகா சரத்குமார் படத்தின் இரண்டாம் பாதியை கலகலப்பாக மாற்றுகிறார். அதுதான் ரசிகர்களுக்கு சுவாரஸ்யத்தை கொடுக்கிறது.

ரெடின் கிங்ஸ்லி, சென்ட்ராயன் ஆகியோரின் காமெடி காட்சிகள் ஒர்க் அவுட் ஆகவில்லை. அதேநேரம் சுனில், அஜய் கோஸ், ஜான் விஜய் ஆகியோர் தங்களின் கதாபாத்திரங்களை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

படத்தின் பலம்: கீர்த்தி சுரேஷ், ராதிகாவின் நடிப்பு அங்கங்கே வரும் டாக் காமெடிகள், ஷான் ரோல்டனின் பின்னணி இசை மற்றும் தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு ஆகியவை படத்திற்கு பிளஸ்.

படத்தின் மைனஸ்: அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை சுலபமாக கணிக்க கூடிய திரைக்கதை படத்தின் பெரிய பலவீனமாக இருக்கிறது. கோலமாவு கோகிலா படத்திலிருந்து திரைக்கதை நேர்த்தி இதில் இல்லை. அதேநேரம் கீர்த்தி சுரேஷ், ராதிகா சரத்குமார் ஆகியோரின் நடிப்பில் கலகலப்பான காட்சிகள் ரசிகர்களை திருப்திப்படுத்துகிறது. கண்டிப்பாக குடும்பத்துடன் சென்று ஒருமுறை தியேட்டரில் பார்க்கலாம்.

Published by
ராம் சுதன்