Categories: latest cinema news reviews sakthi thirumgan movie review vijay antony சக்தி திருமகன் விமர்சனம் விஜய் ஆண்டனி

Sakthi Thirumagan Review: சூப்பர் ஃபாஸ்ட் ஃபர்ஸ்ட் ஆப்!.. லாஜிக் இல்லாத செகண்ட் ஆப்!..

அருவி திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த அருண் பிரபு விஜய் ஆண்டனியை வைத்து இயக்கியுள்ள சக்தி திருமகன் படத்தின் விமர்சனத்தை பார்ப்போம்..

ஒரு வரிக்கதை:

தலைமைச் செயலகத்தில் புரோக்கராக செயல்படும் விஜய் ஆண்டனி பல கோடிகளுக்கு ஆசைப்பட்டு ஒரு விஷயத்தை செய்ய ஒரு பெரிய அரசியல் புள்ளியிடம் மாட்டி அதிலிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார்? அவரின் பின்புலம் என்ன? என்பதுதான் சக்தி திருமகன் படத்தின் கதை.

அரசியல் மட்டத்திலும், அரசு அலுவலகங்களிலும், அதிகாரிகளிடமும் காரியத்தை சாதிக்கும் புரோக்கர்கள் பற்றிய கதை. அந்த வேடத்திற்கு விஜய் ஆண்டனி கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். படத்தின் முதல் பாதி முழுவதும் பரபரவென செல்கிறது. அரசு அலுவலகங்கள், அதிகாரிகள், அரசியல் தொடர்பான பேரங்கள் என பல தகவல்களை சொல்லிக் கொண்டே போகிறார்கள். அதில் நடப்பு அரசியலையும் கலந்து சொல்லி இருக்கிறார்கள். இந்த கதையை படமாக்கிய அருண் பிரபுவை பாராட்ட வேண்டும்.

அரசியல் புரோக்கராக விஜய் ஆண்டனி:

200 கோடி ரூபாய் கமிஷனுக்காக விஜய் ஆண்டனி ஒரு அரசியல் விளையாட்டை ஆட அவர் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பதை படம் சொல்கிறது. பல வருடங்களுக்குப் பின் காதல் ஓவியம் பட ஹீரோ கண்ணன் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் அவரது வேலையை சரியாகவே செய்திருக்கிறார்.

sakthi thirumagan

படத்தின் முதல் பாதி பரபரபரான போனாலும் படத்தின் இரண்டாம் பாதியில் லாஜிக் இல்லாத காட்சிகள் கொஞ்சம் அயற்சியை கொடுக்கிறது. அதே நேரம் படத்தில் வரும் பிளாஸ்பேக் காட்சிகளும், பெரியாரைப் பற்றிய ரெப்ரன்ஸ்களும் சிறப்பாக இருக்கிறது. நடிகராக மட்டுமில்லாமல் இசையமைப்பாளராக இப்படத்தின் காட்சிகளுக்கு தேவையான பின்னணி இசையை விஜய் ஆண்டனி சிறப்பாக கொடுத்திருக்கிறார். ஷெல்லி ஆர். காலிஸ்ட்டின் ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்திருக்கிறது.

விவேக்கின் படங்களில் அவருடன் நடித்த செல் முருகன் இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் நடித்திருக்கிறார். சீரியசான கதையில் அங்கங்கே அரசியல் நையாண்டி, தற்கால அரசியல், அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் என எல்லாவற்றையும் தொட்டு சுவாரஸ்யம் சேர்த்திருக்கிறார்கள்.

படத்தின் பிளஸ்

  • படத்தின் முதல் பாதி
  • விஜய் ஆண்டனியின் நடிப்பு
  • பின்னணி இசை

படத்தின் மைனஸ்

  • லாஜிக் இல்லாத காட்சிகள்
  • சாமாணியர்களுக்கு புரியாத அதிகப்படியான விபரங்கள்
  • வழக்கமான கிளைமேக்ஸ்

படம் நன்றாக துவங்கினாலும் வழக்கமான சினிமா பாணியில் படம் முடிகிறது படத்தின் பெரிய மைனஸ். அதே நேரம் லாஜிக்கை யோசிக்க விடாமல் கதையை வேகமாக கொண்டு சென்றிருக்கிறார்கள். ஒரு அரசியல் திரில்லர் கதையை சிறப்பாக கொடுத்து கவனம் ஈர்த்து இருக்கிறார்கள்.

Rate : 3/5

Published by
ராம் சுதன்