சோம்பேறிப் பேய்... 418 பக்கம் போயிடாதீங்க... செமயாக கலாய்த்த புளூசட்டை மாறன்.
பிரசாந்த் நீல் வழங்கும் பயங்கரமான பேய் படம்னு நேற்று வெளியானது 418. இந்தப் படத்தோட விமர்சனத்தை பிரபல யூடியூபர் புளூசட்டை மாறன் என்ன சொல்றாருன்னு பாருங்க.
படத்தோட ஆரம்பத்துல ஒரு மெடிக்கல் காலேஜைக் காமிக்கிறாங்க. அதுல ஒரு பெரிய சம்பவம் நடக்குது. ஹாஸ்டலயே குளோஸ் பண்ணிடுறாங்க. சில வருஷம் கழிச்சி அந்த ஹாஸ்டல திறந்து இது பாய்ஸ்க்கு மட்டும்னு சொல்லிடறாங்க. அங்கே 2 ரூல்ஸ் போடுறாங்க. ஒண்ணு அங்கே ஒரு கேர்ஸ் கூட அனுமதிக்கக்கூடாது. இன்னொன்னு 418 ரூமுக்கு மட்டும் யாரும் போகக்கூடாது. ஆனா 418 பக்கம் ஒரு பொண்ணைக் கூட்டிட்டுப் போயிடுறாங்க.
அதுக்கு அப்புறம் என்னாச்சுங்கறதுதான் கதை. இந்தப் படத்தை சென்சார் போர்டுக்கு அனுப்பிச்சா ஐயய்யோ இது இவ்ளோ பயங்கரமா இருக்கே. எப்படி பார்க்குறதுன்னு பயந்துட்டாங்களாம். அதுக்கு அப்புறம் அதுல இருக்குற ஹாரர் சீனை எல்லாம் குறைச்சி திரும்ப அனுப்புனாங்களாம். அதுக்கு அப்புறம்தான் படத்தையே பார்த்தாங்களாம். அப்படி சொல்லி ஒரு புரளியைக் கிளப்பி விட்டுட்டாங்க. படத்தைப் போய் பார்த்தா ஒரு ஒண்ணாம் நம்பர் சோம்பேறித்தனமான பேயை வச்சி படம் எடுத்துருக்காங்க. கொல்லணும்னா கூட பையப் பைய நடந்து வருது.
இவங்க போய் கையில மாட்டுனா கூட அது கொல்றதுக்கு அவ்ளோ லேட்டாகுது. அவ்ளோ சோம்பேறித்தனமான பேயை எடுத்துட்டு, இது பயங்கரமான படம்னு புரளியைக் கிளப்பி விட்டுருக்காங்க. படத்துல 418ல ஏதோ ஒரு பேய் இருக்குன்னு சொல்லப்போறாங்கன்னு பார்த்தா அதை எத்தனை கட்ல சொல்றது? அது வந்து ஒரு விஷயத்துக்காகப் போகும். தேவைக்காக ஒரு சாமியைப் போய் கும்பிடும். அந்த சாமி இதுக்கிட்ட ஒரு டிமாண்ட் வைக்கும். அதை சொல்றதுக்கு ஜவ்வு மிட்டாய் மாதிரி இழுக்குறாங்க. அதைக் கடைசில சொல்றாங்க. ரெண்டரை மணி நேரம் படம் பார்த்தா ரெண்டு வருஷம் ஓடுன மாதிரி இருக்குது.
சென்சார்ல படம் பார்த்தவன் பேய்னு பேப்பர்ல எழுதிக் காட்டுனா கூட பயப்படுவான் போல. அதை சொல்லி இவங்க ஊரெல்லாம் ஏமாத்தி படத்தை நம்ம தலையில கட்டிட்டாங்க. படத்துல சவுண்டு பயங்கரமா இருந்துச்சு. படத்துல அடிக்கடி சொல்ற வார்த்தை 418 பக்கம் போயிடாதீங்கன்னு. அதையே தான் நாமளும் சொல்றோம். 418 பக்கம் போய்றவே போய்றாதீங்க என்கிறார் புளூசட்டை மாறன்.
