Akhanda2: ஹை வோல்டோஜ் ஆக்சன்!.. மாஸ் சினிமா!.. அகாண்டா 2 டிவிட்டர் விமர்சனம்!...
Akhanda2: போயாபட்டி சீனு இயக்கத்தில் ரசிகர்களால் God of Mass என கொண்டாடப்படுபவர் பாலகிருஷ்ணா நடித்து 2021ம் வருடம் வெளியான திரைப்படம் அகாண்டா. படத்தில் இரண்டு கதாபாத்திரங்கள் அதில் ஒரு கதாபாத்திரத்தில் அகோரியாக வந்து ரசிகர்களை அதிர வைத்தார் பாலையா.
இந்த படத்தில் அதிரடி ஆக்சன் காட்சிகளும், வழக்கம்போல பாலையாவின் ட்ரேட் மார்க் பன்ச் வசனங்களும் அனல் பறந்தது. இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கவே தற்போது இரண்டாம் பாகத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த படம் டிசம்பர் 5ம் தேதியான இன்று உலகம் முழுவதும் வெளியானாலும் நேற்று இரவு பெங்களூர் உள்ளிட்ட பெங்களூர் ஹைதராபாத் உள்ளிட்ட சில ஊர்களில் சிறப்பு காட்சிகள் அறிவிக்கப்பட்டது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இப்படம் வெளியாகவில்லை. அதேநேரம், வெளிநாடுகளில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.
அந்த சிறப்பு காட்சியை பார்த்து ரசிகர்கள் படம் எப்படி இருக்கிறது என்பதை twitter போன்ற சமூகங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அகண்டா 2 அதிரடியாக இருக்கிறது. பாலகிருஷ்ணா வழக்கம் போல் சிங்கம் போல கர்ஜிக்கிறா..ர் அவர் திரையில் வரும் காட்சிகளும், வசன உச்சரிப்பும் உடலில் மின்சாரம் ஏற்றுகிறது. ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களால் கொண்டாடப்படும்.

பாலாயாவிடம் ரசிகர்கள் என்ன எதிர்பார்ப்பார்களோ அதை போயாப்பட்டி ஸ்ரீனு கொடுத்திருக்கிறார். ஆன்மீகம் தொடர்பான காட்சிகளும் இருக்கிறது. இந்த முறை உணர்ச்சிபூர்வமான காட்சிகளையும் படத்தில் வைத்திருக்கிறார்கள். அது படத்திற்கு படத்தின் வெற்றிக்கு உதவும். படத்தில் வரும் கிளைமாக்ஸ் காட்சி அசத்தலாக இருக்கிறது.
அகாண்டா 2 ஆன்மிகம் கலந்த ஒரு மாஸ் பொழுதுபோக்கு படமாக வெளிவந்திருக்கிறது. ஆக்சன், ஆன்மீகம், உணர்வுப்பூர்வமான காட்சிகள் என்ன தியேட்டரில் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம். மாஸ் ஆக்சன் படம் விரும்பிகளுக்கு அகண்டா 2 கொண்டாட்டமாக இருக்கும்’ என ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.
