அப்பா குட்டி சீரியல் பூமர் அங்கிளுக்கான படமாமே... ரெண்டா பொளந்த புளூசட்டை மாறன்!
இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் அப்பா குட்டி. சென்னை கோயம்பேடு பஸ்ஸ்டாண்டுல தன்னோட குழந்தையைத் தூக்கிட்டு விஜய் ஆன்டனி பஸ் ஏற வாராரு. அங்கே சில கும்பல் அவரைக் கொல்ல பார்க்குறாங்க. அவரு தாய் இல்லாத தன்னோட குழந்தையை எடுத்துக்கிட்டு அங்கிருந்து தப்பிச்சி ஊட்டில போய் செட்டில் ஆயிடுறாரு. அந்த குழந்தைக்காகவே அங்கே வாழ்றாரு. அப்போ அந்த குழந்தைக்கு 5 வயசாகுது. அப்போ தான் அதுக்கு ஒரு ஏதோ பெரிய வியாதி இருக்குறதைக் கண்டுபிடிக்கிறாங்க. அந்த வியாதியை பணத்தாலேயோ, வைத்தியத்தாலேயோ குணப்படுத்த முடியாது. வேறு சிலருடைய உதவி இருந்தா தான் குணப்படுத்த முடியும்.
அப்படிங்கற சூழ்நிலையைக் கூப்பிட்டுக்கிட்டு அது என்ன வியாதி? அந்த வேறு சிலர் யாரு? அப்படிங்கறதுதான் படத்தோட கதை. படத்தோட ஆரம்பத்தை வச்சுப் பார்த்தா இந்தப் படத்துல ஹீரோவுக்கு பாட்ஷா மாதிரி பெரிய பிளாஷ்பேக் இருக்கும். அப்படின்னு நம்பித்தான் படத்தைப் பார்ப்போம். ஆனா அதுக்கும் இந்த படத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இந்த படத்தோட ஃபர்ஸ்ட் ஆஃப்பைப் பார்த்தீங்கன்னா இது முழுக்க முழுக்க அப்பா தன்னோட குழந்தை மேல எவ்வளவு பாசமா இருந்தாரு அப்படிங்கறதைத் தான் வேற வேற டைமென்ஷன்ல எவ்வளவு சுலோவா சொல்ல முடியுமோ அப்படி சொல்லிருக்காங்க.
ஒரு அப்பா குழந்தை மேல பாசமா இருந்தாரு. அப்படிங்கறதுக்கு 2 சீன் வச்சிருந்தா போதும். அதை பர்ஸ்ட் ஆஃப்லயே சொல்லி முடிச்சிருக்கலாம். ஒரு நோய் வந்துருச்சு அப்படின்னு சொன்ன பிறகுதான் கதையே கொஞ்சமாவது நகர ஆரம்பிக்குது. அதுலயும் அதுல சம்பந்தப்பட்டவங்க கோர்ட் ரூம் டிராமா மாறற வரைக்கும் ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் நகர்ந்துச்சு. கோர்ட் ரூம் டிராமா எல்லாம் நகர்ந்த பிறகு கிளைமாக்ஸ்ல ஒரு 5 நிமிஷம் நல்லாவே எமோஷனலா இருந்தது.
இந்த படமே வந்து எல்லா ஆடியன்ஸ்சுக்குமே கிடையாது. அந்த சீரியல் பார்க்கக்கூடிய ஆடியன்ஸ் டார்க்கெட் பண்ணிருக்காங்க. அவங்களுக்கு இந்தப் படம் பிடிக்கும். மத்தபடி இந்த படத்துல ஃபைட் இருக்கா, பாட்டு இருக்கா, டான்ஸ் இருக்கான்னு எதிர்பார்த்து இருக்குறவங்களுக்கு இந்த படம் செட் ஆகாது. சீரியல் பார்க்குறவங்க இதை ஃபேமிலியோட ஒரு வாட்டி பார்த்தீங்கன்னா ஓகே ரகமாக இருக்கும்.
