Ananthan Kaadu Review : ஆர்யாவின் 'அனந்தன் காடு' எப்படி இருக்கு?... ட்விட்டர் விமர்சனம்!

 
Ananthan kaadu review

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் 'அனந்தன் காடு'. இப்படம் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் இன்று (ஜூன் 25 ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்த படத்தை ஆர்ஜே பாலாஜியின் 'ரன் பேபி ரன்' புகழ் இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். இதில் முக்கிய வேடங்களில் முரளி கோபி, நிகிலா விமல், இந்திரன்ஸ், ரெஜினா, சுனில், சித்திக், அஜய், போஸ் வெங்கட், அச்யுத் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார், எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனை 'மினி ஸ்டுடியோஸ், கோகுலம் மூவீஸ்' நிறுவனங்களுடன் இணைந்து ஆர்யா தயாரித்துள்ளார்.

தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது விமர்சனங்களை பதிவிட்ட வண்ணமுள்ளனர்.


 

From Around the web