இதோடு கடையை மூடினால் நல்லது... திரிஷ்யம் 3 குறித்து புளு சட்டை மாறன் விமர்சனம்
இதோடு கடையை மூடினால் நல்லது... திரிஷ்யம் 3 குறித்து புளு சட்டை மாறன் விமர்சனம்
மோகன்லால், மீனா நடித்த திரிஷ்யம் 3 நேற்று வெளியானது. முதல் 2 பாகங்களுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து 3ம் பாகத்திற்கு ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.
இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகர் புளு சட்டை மாறன் திரிஷ்யம் 3 படத்திற்கான விமர்சனத்தை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுளோளார். அதில் ,
இந்த படத்தின் முதல் பாகம், கேபிள் ஆப்ரேட்டரான ஜார்ஜ் குட்டி நிம்மதியாக வாழ்ந்து வருபவர் தனது குடும்பத்திற்கு வந்த பிரச்னையை சமாளிக்க தற்காப்புக்காக செய்யப்ப கொலையை, மறைத்து குடும்பத்தை காப்பாற்ற தனது சினிமா அறிவை பயன்படுத்துகிறார் என்பது தான். இரண்டாவது பாகத்தில், இந்த வழக்கு இன்னும் முடியவில்லை, எப்போது வேண்டுமானாலும் மறு விசாரணை செய்யப்படலாம். அப்படி நடந்தால் என்ன செய்ய வேண்டும் என முன்கூட்டியே திட்டமிட்டு இருப்பார், அவை சுவாரஸ்யமாக இருந்தது.
3வது பாகத்தில் பணக்காரரான ஜார்ஜ் குட்டி தான் எழுதிய கதையை சினிமாவாக தயாரிக்கிறார். படமும் வெற்றி பெருகிறது. பிள்ளைகளும் வளர்ந்து பெரியவர்களாகின்றனர். இதில் மூத்த பெண்ணுக்கு திருமணம் ஏற்பாடு செய்கிறார். ஆனால் ஒவ்வொரு வரணும் தட்டி தட்டி செல்கின்றது. யாரோ திருமண விசயத்தை பின்னால் இருந்து தடை செய்து வருகிறார்கள் என்பதை உணர்கிறார். யோரோ கட்டம் கட்டுகிறார்கள் என்பதை உணர்ந்த அவர், யார் அசதற்கு காரணம் என்று ஜார்ஜ் தேடி செல்கிறார். அதற்கு பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை.

படம் முதல் 2 மணி நேரம் பொங்கல் சாப்பிட்ட மாதிரி மந்தமாக போகிறது. கடைசி 30 நிமிடங்கள் ஓகே தான். முதல் இரண்டு பாகங்களை போன்று 3ம் பாகத்தில் சுவாரஸ்யம் இல்லை. ஜார்ஜ் குட்டி மீதான வழக்கை மறுபடியும் விசாரணை செய்ய வேண்டும் என்றால், ஜார்ஜ் குட்டிக்கு எதிராக சரியான ஆதாரம் தேவை. அதற்கான ஆதாரங்களை திரட்ட முயற்சி செய்கிறார்கள். இதில் என்னவென்றால், ஜார்ஜ் குட்டி தொடர்பான ஆட்களைச் சந்திக்கச் செல்லும் போது, அந்த தகவல் உடனே ஜார்ஜ் குட்டிக்கும் தெரிந்து விடுகிறது. இதனால் திரைகதையில் சுவாரஸ்யம் இல்லாமல் உள்ளது. முந்தைய பாகங்களில் ஆஷா சரத்தின் கதாபாத்திரம் மிகவும் வலுவானதாக இருந்தது. ஆனால் இந்த பாகத்தில் சித்திக்கின் கதாபாத்திரம் தான் ஜார்ஜ் குட்டிக்கு எதிராக உள்ளது. அவரும் மொசாட் லெவலுக்கு பிளான் செய்கிறார், ஆனால் எல்லாமே மொக்கை மொக்கையாக உள்ளது.
இதில் வேறு நான்காம் பாகத்திற்கான லீட் கொடுத்துள்ளார்கள். சரக்கு தீர்ந்து போச்சு. இதோடு கடையை முடினால் நல்லது. இருந்தாலும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்று பார்த்தால் ஒரு சுமாரான ஓகே ரக படமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
