பர்ஸ்ட் ஆஃப் கேவலம்..செகண்ட் ஆஃப் அதைவிட ரொம்ப கேவலம்- டாக்ஸிக்கை பொளந்து கட்டிய ப்ளு சட்டை மாறன்

டாக்ஸிக் ப்படம் குறித்த புளு சட்டை மாறன் விமர்சனம்
 

கேஜிஎப் மாபெரும் வெற்றிக்கு பின் யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் டாக்ஸிக். ருக்மணி வசந்த், கியாரா த்வானி, நயன்தாரா போன்ற பெரிய நட்சத்திரபட்டாளங்களே நடித்துள்ள இந்த படம் ரசிகர்களை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. சுமார் 500 கோடி பட்ஜெட்டில் த்யாராகியுளள இந்த படம் மொக்கை திரைக்கதையால் காலியானதாக விமர்சனங்கள் வருகின்றன.

இந்த நிலையில் பிரபல யூடியூபர் ப்ளு சட்டை மாறன் தந்து சேனலில் டாக்ஸிக் படம் குறித்த விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில்,

பர்ஸ்ட் ஆஃப் கேவலம்..செகண்ட் ஆஃப் அதைவிட ரொம்ப கேவலம்- டாக்ஸிக்கை பொளந்து கட்டிய ப்ளு சட்டை மாறன்

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் வெளியான படம் டாக்ஸிக். இந்தப் படம் ஆரம்பிச்சதுல இருந்து முடிவு வரைக்கும் இந்தப் படத்தோட கதை என்ன அப்படிங்கறதை கண்டுபிடிச்சு போடணும் அப்படிங்கறதுல ரொம்ப உன்னிப்பா இருந்தோம். கடைசி வரைக்கும் கண்டுபிடிக்கவும் முடியல. நம்ம கூட படம் பார்த்த சில பேருகிட்ட படத்தோட கதை என்னங்க அப்படின்னு கேட்டப்போ ஆளாளுக்கு ஒரு கதையை சொல்றாங்க. படம் எடுத்தவங்களுக்கே இது தெரியுமா அப்படிங்கறது இன்னும் தெரியல.

இந்தப் படம் சுமாரா ஒரு மூணே கால் மணி நேரம் ஓடுது. இதுல என்ன பார்த்தோம்னா ஹீரோ வர்றாரு. தம் அடிக்கிறாரு. தண்ணி அடிக்கிறாரு. எவனாவது கையில கிடைச்சா இழுத்துப் போட்டு அடிக்கிறாரு. வெட்டுறாரு. குத்துறாரு. துப்பாக்கி இருந்தா எடுத்து சுடுறாரு. அப்புறம் பஞ்ச் டயலாக் பேசுறாரு. அப்புறம் யாராவது பொம்பளைக் கிடைச்சா கூப்பிட்டுப் போயிடுறாரு. அப்புறம் மறுபடியும் வந்து இதையே செய்றாரு. துப்பாக்கி கிடைச்சா எடுத்து சுடுறாரு. எவன் யாரை சுடுறான்? எதுக்கு சுடுறான்னே தெரியல. படத்துல நிறைய ஹீரோயின் இருக்கு. யாரையாவது கூப்பிட்டு போயிடுறாரு. படம் முழுக்கவே இதுதான் ரிப்பீட். முழு படம் பார்த்து முடிச்சதுக்கு அப்புறம் ஒரு விஷயம் மட்டும் நமக்கு தெரிஞ்சது. இது ஒரு நல்ல ஹை பட்ஜெட்ல லோ ஆர்டிஸ்ட்ட போட்டு ஒரு பிட்டு படம் எடுத்துருக்காங்கன்னு மட்டும் தெரியுது.

பர்ஸ்ட் ஆஃப் கேவலம்..செகண்ட் ஆஃப் அதைவிட ரொம்ப கேவலம்- டாக்ஸிக்கை பொளந்து கட்டிய ப்ளு சட்டை மாறன்

படம் முழுக்க ஒரு ரெண்டு மூணு விஷயம் தான் மேஜரா திரும்ப திரும்ப காட்டுறாங்க. அதுல ஒண்ணு அந்த சர்க்கஸ் கூடாரம் மாதிரி ஒண்ணு இருக்கு. இன்னொன்னு கேசினோ மாதிரி இருக்கு. காலையிலயே குளிச்சி கிளிச்சி நல்ல டிரஸ் பண்ணி அந்த இடத்துக்கு வர்றாங்க. வந்த உடனே வாய் வார்த்தை முத்தி சண்டை பிடிச்சி ஒருத்தன ஒருத்தன் அடிச்சி துப்பாக்கியால சுட்டு கலாட்டா பண்ணி இருக்குற முக்கால்வாசி பேர் செத்து போயிடுறான். மீதி பேர சண்டை கிண்டை எல்லாம் போட்டு சட்டை எல்லாம் கிழிச்சி அங்க இருந்து கிளம்பிடுறான். அங்க இருக்குற இடத்தை அப்படியே அடிச்சு துவம்சம் பண்ணிட்டு போயிடுறானுங்க. மறுநாள் காலையிலும் அதே மாதிரி நடக்குது. இவங்களுக்கு யாரு இந்த டிரஸ் எல்லாம் அயர்ன் பண்ணிக் கொடுக்குறது? எப்படி பளிச் பளிச்னு வாராங்கன்னே தெரியல. திரும்ப திரும்ப எத்தனை நேரம் பார்த்துக்குறது?

ஒரு கட்டத்துக்கு மேல பயங்கர போர் அடிக்க ஆரம்பிச்சுருச்சு. இவங்க பேசுன வசனம் எல்லாம் பார்த்தீங்கன்னா சும்மா இழுத்து இழுத்து அவங்க பேசுனதும் அந்த மாடுலேஷனும் இருந்துச்சு. வசனம் அதுக்கு மேல இருந்துச்சு. ஒரு கட்டத்துக்கு மேல இந்த டயலாக் தான் ஒரு என்டர்டெய்ன்மண்டா நமக்கு இருந்துச்சு. இவன் ஒண்ணு கேட்டா அவன் பதில் சொல்றது இந்த டிவி புரோக்ராம்ல மாத்தி யோசில சொல்ற மாதிரி. திரையில ஓடுனதை விட பக்கத்துல இருக்குறவங்க அடிச்ச கமென்ட்லாம் நல்லா ரசிக்கும்படி இருந்துச்சு. சொல்புத்தியும் கிடையாது. சுயபுத்தியும் கிடையாதுன்னு சொல்வாங்க. அந்த மாதிரி இந்தப் படத்துல 64 கலையும் சரியா தான் இருக்கு. ரெண்டே ரெண்டு விஷயம்தான் தள்ளிப் போச்சு. பர்ஸ்ட் ஆஃப் ரொம்ப கேவலமா இருக்கும். செகண்ட் ஆஃப் அதைவிட ரொம்ப கேவலமா இருக்கும் என்கிறார் புளூசட்டை மாறன்.

From Around the web