கஞ்சிக்கு வழியில்லாத வில்லன்... படமாவே வராத அனந்தன் காடு..! வழக்கம்போல பொளந்து கட்டிய புளூசட்டை மாறன்!

 
arya, bluesattai maran

ஜிஎன்.கிருஷ்ண குமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் அனந்தன் காடு. இந்தக் கதை 89, 90களில் நடக்குற ஒரு பீரியடு பிலிம். 89களில் ஆர்யா இலங்கையில் ஒரு தமிழ்ப் போராளியா இருக்காரு. அங்கே நடந்த உள்நாட்டுப் போர்ல குடும்பத்தையே பலி கொடுத்துட்டு அவரும் தற்காலிகமாக தலைமறைவா இருக்க இந்தியா வந்துடுறாரு. இங்கே கேரளாவுல புரொபஷனல் கில்லரா இருக்குற ஒரு கூட்டத்துக்கு தலைவரா இந்திரன்ஸ் இருக்காரு.

அவருகூட நாலு பேர் இருக்காங்க. இவங்க தான் ஆர்யாவுக்கு தஞ்சம் கொடுக்குறாங்க. இந்திரன்ஸ்க்கு என்ன வேலைன்னா கேரளா சிம், ஐஜி இருவரும் கொடுக்குற அசைன்மென்டை வச்சிக்கிட்டு அவங்க யாராவது ஒரு போட்டோவைக் கொடுத்து அவங்களைப் போட்டுத் தள்ளுறதுதான் வேலை. அதுக்கு உண்டான பணத்தைக் கொடுப்பாங்க. இந்த ரெண்டு பேரையும் சரியா பயன்படுத்திக்கிட்ட அந்த ஐஜியும், சிஎம் மும் ஒரு கட்டத்துல இவங்களுக்கு எதிராவே சதி வலை பின்னுறாங்க. அதுக்கு அப்புறம் என்ன நடக்குங்கறதுதான் கதை. 

படத்தோட ஆரம்பத்துல இலங்கை ராணுவத்துக்கும், தமிழ் போராளிகளுக்கும் சண்டை நடக்கும். இரு குழுவினரும் நல்லா பயிற்சி எடுத்தவங்க. இந்த சண்டை எந்தளவு நம்பகத்தன்மையோடு இருக்கணும். ஜெய்சங்கர் படம் மாதிரி எடுத்து வச்சிருக்காங்க. அங்கேயே நமக்கு நம்பிக்கை போச்சு. இந்தப் படத்துல வர்ற ஒவ்வொரு சீனுமே நமக்கு கம்மாட்டி படம், சுப்பிரமணியபுரம்னு இந்த மாதிரி படங்களையே நமக்கு ஞாபகப்படுத்திக்கிட்டு இருக்கு.

அந்த 2 படங்களும் உண்மைக்கு நெருக்கமா இருக்கும். அதை இதுகூட ஒப்பிடும்போது துளியும் உண்மைக்கு நெருக்கமா இல்லாததால இந்தப் படத்தை ரசிச்சுப் பார்க்க முடியல. முழு படத்தையுமே மேம்போக்கா கையாண்டுருக்காங்க. படத்துல சிஎம் வாராரு. ஐஜி வாராரு. இவங்களை எப்படி காட்டணும்? எவ்வளவு பவர்ஃபுல்லானவங்க. பார்த்தா ஒரு கான்ஸ்டபிளும், கவுன்சிலரும் சந்திச்சிப் பேசுற மாதிரியே இருக்கும். இந்தப் பக்கம் பார்த்தா இந்திரன்ஸ் டீம் ஐஜிக்கும், சிஎம்முக்கும் பல கொலைகளைப் பண்றவங்கன்னு காட்டுறாங்க.

அவங்களைப் பார்த்தா எப்போ பார்த்தாலும் கஞ்சிக்கு வழியில்லாம சுத்திக்கிட்டு இருக்காங்க. ஏரியாவுல ரெண்டு 75 கேஸை வாங்கிக்கிட்டு போலீஸ் ஸ்டேஷன் பக்கம் போயிட்டு வந்தாலே அவன் தாவுத் இப்ராஹிம் மாதிரி சுத்திக்கிட்டு இருக்கான். கம்மாட்டி படம், சுப்பிரமணியபுரம் மாதிரி படங்களோட இன்ஸ்பிரேஷன்ல இந்தக் கதையை எழுதிப்புட்டு தெலுங்கு படம் மாதிரி கொடுக்க ட்ரை பண்ணிருக்காங்க. ஆனா அதுக்கான திரைக்கதை, உண்மைத்தன்மை படத்துல இல்லை. அதனால, இது தெலுங்கு படம் மாதிரியும் வரல. மலையாளப்படம் மாதிரியும் வரல. இது படமாவே வரல என்று வழக்கம்போல பொளந்து கட்டுகிறார் புளூசட்டை மாறன்.

Tags

From Around the web