சதுரங்க வேட்டை, லக்கி பாஸ்கர் பார்த்து சூடு போட்டுக் கொண்ட கான் சிட்டி... விளாசும் புளூசட்டை மாறன்!
இயக்குனர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் கான் சிட்டி. இந்தப் படத்தில் 3 வித்தியாசமான ஆள்களைக் காட்டுறாங்க. ஒண்ணு ஹீரோ. இன்னொன்னு ஹீரோயின். அடுத்து வடிவுக்கரசி பையனாக இருக்குற யோகிபாபு. இந்த மூணு பேருக்குமே இருக்குற ஒற்றுமை என்னன்னா இவங்களுக்கு பெரும் பணம் தேவைப்படுது. அதை குறுகிய காலத்தில் சம்பாதிக்கணும்னு நினைக்கிறாங்க. அதுக்கு அவங்க கையில எடுக்குற வழி இதுதான்.
ஹீரோ அரசு வேலையில் பில் கலெக்டரா இருக்காரு. அவருக்கிட்ட பில் கட்ட வருபவர்களின் பணத்தை ரொட்டேட் பண்ணி அதை முதலீடு செய்து கிடைக்கிற குறைந்த நேரத்துல பெரிய அளவில் சம்பாதித்து அந்தக் காசை திருப்பிக் கட்டிடலாம்னு நல்ல எண்ணத்துல தான் அந்தக் காசை ரொட்டேட் பண்றாரு. அதுமாதிரி ஹீரோயின் ஊருல இருக்குறது எல்லாம் என் வீடு தான்னு சொல்லி அதை மேல் வாடகைக்கு விட்டு அந்தக் காசை வாங்கி முதலீடு பண்ணனும்னு பிளான் பண்றாங்க.
அது மாதிரி யோகிபாபு, வடிவுக்கரசி ஃபேமிலி ஆன்லைன்ல ஒரு சிம்பத்தி (இரக்கம்) கிரியேட் பண்ணி அது மூலமா பெரும் பணம் சம்பாதிக்கலாம், இன்வெஸ்ட் பண்ணலாம்னு நினைக்கிறாங்க. இவங்க பிளான் எல்லாம் சரியா தான் போய்க்கிட்டு இருக்கு. ஆனா இவங்க இன்வெஸ்ட் பண்ணப் போன இடத்துல தான் பெரிய பிரச்சனை வருது. அதுக்கு அப்புறம் என்னாச்சுங்கறதுதான் கதை. இவங்க சதுரங்க வேட்டை, லக்கி பாஸ்கர் மாதிரியான படங்களை மனசுல வச்சிக்கிட்டு இந்தப் படத்தை எடுத்துருக்காரு. சதுரங்க வேட்டையில ஹீரோ ஏமாத்துக்காரரா இருப்பாரு. அதுல இருந்து அவரு எப்படி தப்பிச்சாருங்கறதுதான் கதை.
அதனால அது இன்ட்ரஸ்டா இருக்கும். ஏமாத்துறதும் வித்தியாசமா இருக்கும். அடுத்து என்னன்னு பார்க்க ஆர்வமா இருக்கும். பாம்பு, கலசம் என எல்லா ஏமாத்து வேலையிலும் அவ்ளோ டீட்டெய்ல்ஸ் இருக்கும். ஆனா இந்தப் படத்துல ஹீரோ மின்வாரியத்துல வேலை பார்க்குறாரு. அவருக்கிட்ட பணம் கட்டுறவங்க பணத்தை வாங்கி இவரோட கல்லாவுல போட்டுக்கிறாரு. படம் முழுக்க இதே மாதிரி ஏமாத்து வேலை தான். இதுல ஒரே விஷயத்தை ரிப்பீட்டடா பண்றாங்க. எப்பத்தான்டா முடிப்பீங்கன்னு இருக்கு. படம் 15 வருஷத்துக்கு முன்னால எடுத்த மாதிரி காட்டுறாங்க.
அப்போ 500 ரூபா கரெண்ட் பில் வர்றதே பெரிய விஷயம். அதுவும் கடைசி நாள் தான் கூட்டமா வந்து கட்டுவாங்க. இது எப்பப் பார்த்தாலும் டாஸ்மாக் லைன் மாதிரி வந்து கட்டிக்கிட்டே இருக்காங்க. அவரும் வாங்கிப் போட்டுக்கிட்டே இருக்காரு. எதுவுமே நம்பகத்தன்மை இல்லை. ஹீரோயின் ஏமாத்துறதும் நம்புற மாதிரியே இல்லை. வடிவுக்கரசி, யோகிபாபு காமெடி ஒர்க் ஆகல. நம்புற மாதிரியும் இல்லை. வில்லன் கேரக்டரும் ஸ்ட்ராங்கா இல்லை.
எடுத்துக்கிட்ட கதையில் சுவாரசியம் இருந்தும் இன்ட்ரஸ்ட்டா பண்ணாம விட்டுட்டாங்க. இந்தப் படம் சொல்ல வர்ற கருத்து என்னன்னா வழக்கமா ஏமாத்துறது தப்புன்னு தான் சொல்வாங்க. இந்தக் கதை ஏமாறுவதும் தப்புன்னு சொல்லுது. அதுக்கு அப்புறம் நீங்க ஒரு நல்ல முடிவா எடுத்துக்கோங்க என்று கலாய்க்கிறார் பிரபல யூடியூபர் புளூசட்டை மாறன்.
