நல்ல கதையில எவ்ளோ குளறுபடி? நூறு சாமியை மிஸ் பண்ணிய இயக்குனர்... புளூசட்டைமாறன் பொளேர்!

 
100 samy, bluesattai maran

சசி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் நூறு சாமி. ஹீரோயின் சுவாசிகா இளம் விதவை. அவருக்கு 7 வயசுல 2 பசங்க இருக்காங்க. தனியாளா 2 பசங்களையும் படிக்க வைக்கிறாங்க. உள்ளூருல உள்ள ஆம்பளைகளால சீண்டலுக்கு உள்ளாகுறாங்க. இந்தக் கஷ்டத்துல 2 பேரையும் காலேஜ்க்கு படிக்க வைக்கிறாங்க. இந்த நிலையில் உள்ளூரு வாத்தியார் ஒருத்தரு சுவாசிகாவுக்கு துணை தேவைப்படுதுன்னு நினைச்சிக்கிறாரு.

பெரிய பையனைக் கூப்பிட்டு நீ ஏன் உங்க அம்மாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கக்கூடாதுன்னு கேட்குறாரு. அதுக்கு அவன் அம்மா கூட ரொம்ப சண்டைக்குப் போறான். இந்த நிலையில கொஞ்ச நாள் கழிச்சி 2 பேரும் வேலைக்குப் போயிடுறாங்க. வேலைக்குப் போனதும் அவன் மெச்சூரிட்டிக்கு யோசிக்கிறான். அம்மா நீ ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணக்கூடாதுன்னு கேட்குறான். 

இப்ப இந்த அம்மா தயாரா இல்லை. ஊர்க்காரப் பயலுகளும் தயாரா இல்லை. இதுக்கு அப்புறம் என்னாச்சுங்கறதுதான் படத்தோட கதை. இது ஒரு உண்மைக்கதைன்னு சொல்றாங்க. கட்டாயமாக சொல்ல வேண்டிய கதையும் கூட. ஆனா சொன்ன விதத்துலதான் ஏகப்பட்ட குளறுபடிகளை வச்சிருக்காங்க. விதவை மறுமணம்கறது தேவையான விஷயம். இந்தப் படத்துல அந்த அம்மா ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும்? அதை ஏன் பசங்க மறுக்கணும்? அவங்களே ஏன் திரும்ப கல்யாணம் பண்ண சொல்லணும்? அப்படிங்கறதுக்கு எல்லாம் டீட்டெய்லே இல்லை.

அதனால இந்தக் கதையை ஊன்றிப் பார்க்க முடியல. இந்தக் கதையில வர்ற வில்லன்இ மியூசிக் எதுவும் சரியில்ல. சீரியஸான நேரத்துல காமெடி மியூசிக். காமெடியான சீன்ல சீரியஸ் மியூசிக். என்ன மூடுல இருக்கு படம்கறதையே தப்பு தப்பா மியூசிக் கன்வே பண்ணுது. ஃபீல் குட் மூவியா பார்க்க வேண்டிய படத்தை இடையில இடையில க்ரைம் திரில்லரா பார்க்க வச்சிருக்காங்க. இந்த அம்மாவோட வாழ்க்கையும்இ பசங்களோட வாழ்க்கையும் படத்துல ஒட்டவே இல்லை. ரொம்ப அந்நியமா இருக்கு. யூடியூப் ஃபேமிலி வருது. கதையை எங்கேயோ கொண்டு போயிட்டாங்க. பொதுவா சசியோட படம் ஃபீல் குட் மூவியா இருக்கும். இந்தப் படத்துல அது எங்கேயோ மிஸ் பண்ணிட்டாங்க என்கிறார் பிரபல யூடியூபர் புளூசட்டை மாறன். 

Tags

From Around the web