கடுப்பேத்தும் காமெடி..! டைட்டிலே தப்பு... பரிமளா அண்ட் கோவை கிழித்தெடுத்த புளூசட்டைமாறன்!
பாண்டிராஜ் இயக்கத்தில் வந்துள்ள பரிமளா அண்ட் கோ பற்றிய விமர்சனத்தை பிரபல யூடியூபர் புளூசட்டை மாறன் பகிர்ந்துள்ளார். வாங்க பார்க்கலாம்.
ஜெயராமன், ஊர்வசி ஒரு மிடில் கிளாஸ் ஃபேமிலி. அவங்களுக்கு 2 பொம்பளைப் புள்ளைங்க. இதுல சின்னப்புள்ளைய லோக்கல்ல இருக்குற ஒரு ரவுடி பையன் கலாய்க்கிறான். ஃபாலோ பண்றான். அந்தப் பொண்ணு எனக்குத்தான்னு வீட்டுல வந்து கலாட்டா பண்றான். அதைக் கேட்டுப் போன பெரிய பொண்ணையும் ஏதாவது பண்ணிடுவேன்கறான். அந்தக் குடும்பமே அவனைப் பார்த்துப் பயந்துக்கிட்டு இருக்கு. அவனை எதிர்க்குற சக்தி அவங்களுக்குக் கிடையாது. அவனும் விடுற மாதிரி இல்ல. இந்த நெருக்கடியில அவங்க நாலு பேரும் கூடிப் பேசுறாங்க.
இவனை நம்மால எதிர்க்கவும் முடியாது. இவனும் சும்மா விட மாட்டான். இவன்கிட்ட இருந்து தப்பிக்கணும்னா ஒரே வழி இவனைப் போட்டுத் தள்ள வேண்டியதுதான்னு குடும்பமே முடிவு எடுக்குறாங்க. எடுத்துட்டு மறுநாள் காலைல பார்த்தா அந்தப் பையன் செத்துக் கிடக்குறான். குடும்பத்துல எல்லாருக்கும் ஷாக். இந்தக் கொலையை நம்ம பண்ணல. யாரு பண்ணிருப்பான்னு நினைக்கும்போது அவங்களுக்கு இன்னொரு சிந்தனையும் வருது. நம்ம நாலு பேருல யாராவது ஒருத்தர்தான் பண்ணிருக்கணும். அப்படின்னு ஒருத்தரை ஒருத்தர் சந்தேகப்பட்டுக்கிட்டு இருக்காங்க. இந்த நிலைமையில போலீஸ் விசாரணை என்னாச்சுங்கறதுதான் கதை.
த்ரிஷ்யம் படத்தை மனசுல வச்சித்தான் இந்தப் படத்தை எடுத்துருப்பாங்க. ஆனா படம் பார்த்து கொஞ்ச நேரத்துல இந்தப் படம் உருப்படப் போறதுல்லன்னு தெரிஞ்சிடுது. காரணம் என்னன்னா இந்தக் கொலையை நாலு பேரும் பண்ணிருக்க மாட்டாங்க. அப்படியே பண்ணிருந்தா கூட இவங்க மாட்ட மாட்டாங்க. அப்படிங்கற அளவுல தான் ஆரம்பத்துலயே நாம புரிஞ்சிக்க வேண்டியிருந்தது. ஆனா த்ரிஷ்யம் படத்துல எங்கே மோகன்லால் குடும்பம் மாட்டிக்குமோன்னு ஒரு சீரியஸ்னஸ் இருந்தது. இந்தப் படத்துல மேம்போக்காகவே திரைக்கதை அமைச்சிருக்காங்க. படத்தைக் காமெடியா ஆரம்பிச்சி சீரியஸா கொண்டு போறதுதான் இவங்க பிளானா இருந்தது.
ஆனா இது ஸ்கூஃபா ஆரம்பிச்சி ஸ்கூஃபாவே தான் போய்க்கிட்டு இருந்ததே தவிர, காமெடியும் ஒர்க் அவுட் ஆகல. எப்பவும் சீரியஸ் மோடுக்கும் படம் போகவே இல்லை. அது மட்டும் இல்லாம வில்லனைக் கொலை பண்ண திட்டம் போடுறாங்க. அவன் நியாயமா கொலை செய்யப்பட வேண்டியவன்தான். ஆனா படத்துல அவன் செத்த பிறகு அவன் நல்லவன்தான்கற மாதிரி நியாயப்படுத்துறாங்க. இந்தப் படத்துலயே முக்கியமானது போலீஸ் விசாரணைதான். ஆனா அவரு போண்டா, பஜ்ஜியத் தின்னுக்கிட்டும், பானிபூரியைத் தின்னுக்கிட்டும் இருக்காரு. கடைசி பத்து நிமிஷத்துல ஒரு கருத்தை சொருகி கருத்தூசி போடறாங்க. அதுதான் அல்டிமேட்.
த்ரிஷ்யம் மாதிரி கதையை எடுத்துக்கிட்டு இவங்க எடுத்த காமெடிதான் பயங்கர கோபமா இருந்தது. யோகிபாபு அடிக்கிற காமெடி எல்லாம் பயங்கற கோபம்தான். இந்தப் படத்துல டைட்டிலே தப்பா இருக்கு. யார்றா பரிமளான்னு கேட்டா ஜெயராமன்தான் பரிமளாங்கறாங்க. காரணம் கேட்டா அதெல்லாம் கிடையாது. நீங்க இந்தப் படத்தைப் பார்த்தா உனக்கு டைட்டில்தான் பிரச்சனையான்னு கேட்பீங்க. அதுக்கு அப்புறம் உங்க இஷ்டம் என்கிறார் புளூசட்டைமாறன்.
