படத்துல வில்லன் யாருன்னு கடைசி வரை தெரியல... தெறிக்கவிட்ட புளூசட்டைமாறன்! என்னபடம்னு பாருங்க!
ஆதர்ஷ குடும்பம் ஹெளஸ் நம்பர் 47 என்ற தெலுங்கு படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் விமர்சனம் குறித்து பிரபல யூடியூபர் புளூசட்டை மாறன் என்ன சொல்றாருன்னு பாருங்க.
இயக்குனர் த்ரீவிக்ரம் இயக்கத்தில் வெளியான படம் ஆதர்ஷ குடும்பம் ஏகே 47. இந்தப் படத்தோட ஆரம்பத்துல ஒரு பவேரியாகாரன் மாதிரி ஒரு கேங்கைக் காட்டுறாங்க. அந்தக் கேங் என்ன செய்றதுன்னா பெரிய பணக்கார வீடுகளுக்குப் போய் கொள்ளை அடிச்சிட்டு வருது. அது மட்டும் இல்லாம அங்கே இருக்குறவன எல்லாம் கொலை பண்ணிட்டுப் போயிடுது. இது போலீஸ் டிப்பார்ட்மென்டுக்குப் பெரிய பிரச்சனையாகுது.
அந்தக் கொலை, கொள்ளைக்காரங்களோட பேட்டர்ன் என்னன்னா பெரிய பணக்காரங்க வீட்டுக்குப் போயிட்டு வீட்டு வேலைக்காரியாவோ, டிரைவராகவோ, தோட்டக்காரனாவோ வேலைக்கு சேர்ந்துட்டு அங்கே பெரிய பணப்புழக்கம் இருக்குற நாளில உள்ளே புகுந்து எல்லாரையும் கொலை பண்ணிட்டு அந்த அமௌண்ட அடிச்சிட்டுப் போயிடுறதுதான் அவங்க பேட்டர்னா இருக்கு. இதை வந்து போலீஸ் கவனிச்சிட்டு ஊருல இருக்குற பணக்காரங்களை எல்லாம் கொஞ்சம் அலர்ட் பண்ணி வைக்கிறாங்க. இந்த சமயத்துல வெங்கடேஷ் குடும்பத்தைக் காட்டுறாங்க.
அவர் மனைவி, 2 குழந்தைகளோட இருக்காரு. ரொம்ப கஷ்டப்பட்டுக்கிட்டு கடன்காரனுகளுக்கு பதில் சொல்லிக்கிட்டு இருக்காரு. அவருக்கு லாட்டரி சீட்ல 100 கோடி ரூபா பணம் விழுந்துருக்கு. இந்த விஷயம் பவேரியா கேங்குக்குத் தெரிஞ்சிப் போகுது. அதுக்கு அப்புறம் என்னாச்சுங்கறதுதான் கதை. கதை, ஐடியாவைக் கேட்கும்போது நல்லாருக்கு. அது மட்டும்தான் இருக்கு. வேற ஒண்ணும் இல்லை. பவேரியாகாரனைப் பத்தி தீரன் அதிகாரத்துல எப்படி சொல்லிருப்பாங்க. ஆனா இதுல ரொம்ப சப்பையா இருக்கு.
படத்துல வில்லன் யாருன்னு கடைசி வரை கண்டுபிடிக்க முடியல. போலீஸ் விஷயமும் இன்ட்ரஸ்டா பண்ணல. வெங்கடேஷ் ஃபேமிலி பேக்ரவுண்டும் இன்ட்ரஸ்டா இல்லை. தீரன் அதிகாரம், பிளாஸ்ட்டுன்னு பல படங்களை ஞாபகப்படுத்துது. சாங்ஸ், பேக்ரவுண்டு மியூசிக் எல்லாம் கேட்ட மாதிரி இருக்கு. எமோஷன், டுவிஸ்ட், இன்டர்வல் ஃபைட் ஒர்க் ஆகல. பவேரியா கேங் கூட ஊரைச் சுற்றிப் பார்க்க வந்தவங்க மாதிரி தான் இருக்கு. நல்ல ஐடியாவைக் கையில எடுத்துக்கிட்டு ஃபேமிலியோட பார்க்குற மாதிரி கதையை வச்சிருக்காங்க. ஆனா எல்லா விஷயத்தையும் மேம்போக்கா எடுத்துக்கிட்டு ரொம்ப ரொம்ப சுமாரான படத்தை எடுத்துட்டாங்க என்கிறார் புளூசட்டைமாறன்.
