ஒரே குழப்பம்... கால்ஷீட் கிடைச்சிட்டுன்னா இப்படியா பண்ணுவாங்க? அருள்வானைக் காலி பண்ணிய புளூசட்டைமாறன்!
கணேஷ் விநாயக் இயக்கத்தில் வெளியான படம் அருள்வான். இந்தப் படத்தில் அருள்நிதி, ஆரவ், விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் விமர்சனம் குறித்து பிரபல யூடியூபர் புளூசட்டை மாறன் என்ன சொல்றாருன்னு பாருங்க.
ஒரு மலைக்கிராமத்துல மக்கள் அமைதியா வாழ்ந்து வாராங்க. அங்கே ஒருத்தன் இல்லீகலா வேலை செய்றான். அவனும் வனத்துறை அதிகாரியும் சேர்ந்து இந்த ஊர்க்காரனை எல்லாம் காலி பண்ணனும்னு நினைக்கிறாங்க. அதுக்கு அப்புறம் என்னாச்சுங்கறதுதான் படத்தோட கதை. வந்த கதையை எடுக்கலாம். வந்து நொந்த கதையை எடுக்கலாமான்னு கேட்டா, இது கதை கிடையாது. இன்னொரு மெயின் கதையை வச்சிருக்கோம்னு சொல்றாங்க.
அப்போ இதுவரைக்கும் கேட்ட கதை எதுக்குன்னு கேட்டா, அதுதான் இந்த மெயின் கதைக்கு ஃபுட்டேஜ். அந்த ஊர்ல இருக்குற ஒரு சின்னப் பொண்ணு நல்லலா படிச்சி பெரிய ஆளாகி கலெக்டரா வரணும்னு ஆசைப்படுது. அந்த வேலை நடக்கணும்னா கலெக்டரப் போய் பார்க்கணும்னு கிராமத்தை விட்டே வெளியே வருது. கலெக்டரைப் பார்க்குது. அதுக்கு அப்புறம் என்ன நடக்குங்கறதுதான் கதை. இந்தப் படத்தைப் பார்க்கும்போது நல்ல கதை கிடைச்சதுங்கறதுக்காக எடுத்த படம் கிடையாது.
ஒரு கால்ஷீட் கிடைச்சதுங்கறதுக்காக எடுத்த படம் மாதிரி இருக்கு. கால்ஷீட் கிடைச்சா போதும். மலைக்கு அவங்களை எல்லாம் கூட்டிட்டுப் போய் அங்கே போய் கதை எழுதி படம் எடுத்துக்கலாம்னு எடுத்திருப்பாங்க போல இருக்கு. படத்துல ஒரே குழப்பம். மலைவாழ் மக்கள் காடர் மொழி பேசுறாங்க. டைட்டில் படம் பார்க்குறவங்களோட புரிதலுக்காக தமிழ்ல சப் டைட்டில் வருது. ஆனால் பலரும் தமிழ்ல தான் பேசுறாங்க. அந்தப் பொண்ணு போன சீன் வரை காடர் மொழியில பேசிட்டு, ஸ்கூல் டீச்சர்கிட்ட போய் தமிழ்ல பேசுது. கலெக்டர்கிட்டயும் காடர் மொழில தான் பேசுது.
எனக்கு வேற எதுவும் தெரியாதுங்குது. இந்த ஒரு குழப்பமே படத்தை சுத்தமா காலி பண்ணிப் போட்டுடுது. படத்துல காந்தாரா மியூசிக்லாம் வருது. திடீர்னு பார்த்தா கருமூட்டையை எல்லாம் காணோம்னு சொல்றாங்க. இந்தப் படத்துக்கும் கருமூட்டைக்கும் என்ன சம்பந்தம்? என்னென்னத்தையோ சொல்லிக் குழப்பி வச்சிருக்காங்க. கடைசில பார்த்தா பெண்கல்வி அது இதுன்னு சொல்லி ஈயம் பூசுறாங்க. ரிவ்யூ பார்க்கும்போதே இவ்ளோ குழப்பமா இருக்கே. பார்த்த எங்களுக்கு எவ்வளவு குழப்பமா இருக்கும்? இந்தப் படத்தை நீங்க பார்த்தா எவ்ளோ குழப்பமா இருக்கும்னு யோசிச்சிப் பாருங்கன்னு சொல்லி முடிக்கிறார் புளூசட்டை மாறன்.
