குடும்ப பிரச்சனைகளைச் சொல்ற ஹபீபீ படம் நல்லாருக்கா? இல்லையா? புளூசட்டை மாறனே சொல்லிட்டாரே!
இயக்குனர் மீரா கதிரவன் படத்தில் வெளியான படம் ஹபீபி. இந்தப் படம் சுமார் 40 வருஷ காலகட்டத்தில் உள்ள கதையைச் சொல்கிறது. 3 முதல் நாலு காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்களைக் காட்டுறாங்க. ஹீரோவோட சித்தப்பா கூட்டுக்குடும்பத்துல இருக்காரு. கல்யாணம் நடக்குது. தறி நெசவு பவர் மில் காரணமாக நசிகிறது. எல்லாரும் வெளிநாட்டுக்குப் போய் சம்பாதிக்கப் போறாங்க. அது மாதிரி ஹீரோவோட சித்தப்பாவும் போறாரு. கஷ்டப்படுறாரு. ஹீரோ சின்ன வயசுல இருந்தே தன்னோட குடும்பம், சித்தப்பா எல்லாரையும் பார்க்குறாங்க. ஹீரோவோட சித்தப்பா மாதிரி நாம கஷ்டப்படக்கூடாதுன்னு நினைக்கிறாரு. அவர் ஒரு பெண்ணைக் காதலிக்கிறாரு. அதுவே லட்சியமா நினைக்கிறாரு. அவருக்கு ஒரு சோதனை வருது. அப்புறம் என்ன நடக்குதுங்கறதுதான் கதை.
எடுத்துக்கிட்ட கதையை நேர்த்தியா சொல்லிருக்காரு. காதலே லட்சியமான்னு கேட்டா சோத்துக்கு என்ன பண்றது? அப்போ தொழில் சார்ந்த குடும்ப பிரச்சனையான்னு கேள்வி எழுது. இந்த ரெண்டையும் சரிநிகர் சமானமாக சொல்லி இருக்குறதே படத்தோட வெற்றி. இதுல ஒண்ணை இறக்கிருந்தா கூட படம் நல்லாருக்காது. இது ரெண்டையுமே கிரிப்பா கொண்டு போனதால ஸ்ட்ராங்கா இருக்கு கதை. படத்துல இஸ்லாமிய குடும்பத்துல நடக்குற சம்பவம், சடங்குகளை நேர்த்தியா எடுத்துருக்காங்க. எடிட்டிங், பேக்ரவுண்டு மியூசிக் பிரமாதம். படத்தில் நடிகர், நடிகைகள் தேர்வு நல்லா இருந்தது.
அவங்களை நல்லா வேலை வாங்கிருக்காங்க. ஹீரோவுக்கு வயசுக்கு ஏற்ப உடம்மை ஜம்முன்னு காட்டிருக்காங்க. ஈஷா ஹீரோ நல்லா நடிச்சிருக்காரு. முக்கியமான கேரக்டர்ல கஸ்தூரி ராஜா அற்புதமா நடிச்சிருக்காரு. இது கற்பனை கதை கிடையாது. உண்மைச் சம்பவம். அதனால தான் நமக்கு ரசிக்க முடிஞ்சது. படத்துல நிறைய சுவாரசியமான சீன்கள் இருக்கு. குடும்ப பிரச்சனைகளும் நல்லா கனெக்ட் பண்ணுது. திரைக்கதை சுவாரசியமா இருக்கு. கிளைமாக்ஸ் மட்டும் வேணும்னே முடிச்ச மாதிரி இருந்தது. இஸ்லாமிய குடும்பத்தோடு சேர்ந்து வாழற மாதிரி ஒரு உணர்வை படம் தருது. குடும்பத்தோடு பார்க்கலாம் என்கிறார் பிரபல யூடியூபர் புளூசட்டை மாறன்.
