The Odyssey Review : கிறிஸ்டோபர் நோலனின் 'தி ஒடிசி' எப்படி இருக்கு?... ட்விட்டர் விமர்சனம்!

 
The Odyssey Twitter Review

பிரபல ஹாலிவுட் இயக்குநரான கிறிஸ்டோபர் நோலன் தனது படங்கள் மூலம் கவனம் ஈர்த்து உலகமெங்கும் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கிறார். 

இவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படம் தான் 'தி ஒடிசி'. ஃபேன்டஸி ஆக்ஷன் படமான இது இன்று (ஜூலை 17-ஆம் தேதி) ஆங்கிலம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.

இதில் ஹீரோவாக மேட் டாமன் நடித்துள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் டாம் ஹாலண்ட், ராபர்ட் பேட்டின்சன் நடித்துள்ளனர். இந்த முழு படமுமே ஐமேக்ஸ் ஃபிலிம் கேமராவில் தான் ஷூட் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஹோய்டே வான் ஹோய்டெமா.

தற்போது, இந்த ஃபேன்டஸி ஆக்ஷன் படத்தை கிறிஸ்டோபர் நோலனுக்காகவே திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தங்களது விமர்சனங்களை பதிவிட்ட வண்ணமுள்ளனர்.

From Around the web