DC Reivew: அனிருத் சம்பவம்!.. டிசி படம் எப்படி இருக்கு?.. டிவிட்டர் விமர்சனம்..
கோலிவுட்டில் அறிமுகம்: மாநகரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதன்பின் அவர் இயக்கிய கைதி, விக்ரம், மாஸ்டர், லியோ ஆகிய படங்கள் அவருக்கு ரசிகர்களை உருவாக்கியது. அதே நேரம் ரஜினியை வைத்து அவர் இயக்கிய கூலி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
கூலி பட விமர்சனம்: எனவே ரஜினி, கமல் இருவரும் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பை லோகேஷ் கனகராஜ் இழந்தார். ஒருபக்கம் ரத்தம் தெறிக்கும் ஆக்சன் படங்களை எடுக்கும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் லோகேஷ் கனகராஜ் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அப்படி உருவான திரைப்படம்தான் டிசி.

டிசி விமர்சனம்: இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்திருக்கிறார். லப்பர் பந்து படத்தில் கவனம் ஈர்த்த சஞ்சனா மற்றும் வாமிகா ஆகியோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான போதே அதில் ரத்தம் தெறிக்கும் ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில்தான் ஆகஸ்ட் 7ம் தேதியான இன்று டிசி திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது. முதல் காட்சி முடிந்திருக்கும் நிலையில் படம் பார்த்த சிலர் படம் எப்படி இருக்கிறது என்பதை ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்..

அனிருத்தின் பின்னணி இசை: அருண் மாதேஸ்வரன் முதல் முறையாக ஒரு நல்ல படம் எடுத்திருக்கிறார். முதல் பாதி சிறப்பாக இருக்கிறது. இரண்டாம் பாதி எபோவ் ஆவரேஜ். லோகேஷ் கனகராஜ், வாமிகா இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அனிருத் தனது பின்னணி இசை மூலம் இந்த படத்தை வேறு லெவலுக்கு கொண்டு போயிருக்கிறார். அவர்தான் படத்தின் ஹீரோ’ என ஒருவர் பதிவிட்டு இருக்கிறார்.

ரத்தம் தெறிக்கும் ஆக்சன்: இன்னொருவரோ ‘அனிருத்தின் பின்னணி இசை அசத்தலாக இருக்கிறது.. லோகேஷ் கனகராஜன் ஸ்கிரீன் பிரசன்ஸ் நன்றாக இருக்கிறது. வாமிகா, சஞ்சனா, போலீஸ் அதிகாரி நடித்தவர்கள் எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். நிஜமான இடங்களில் படத்தை எடுத்துள்ளனர். சில இடங்களில் தோல்வி இருந்தாலும் முழு படமாக டிசி நன்றாகவே இருக்கிறது. அதேநேரம் படத்தில் அதிக வன்முறை காட்சிகள் இருக்கிறது. நல்ல ஆக்சன் விரும்பிகளுக்கு இந்த படம் பிடிக்கும்’ என ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.
