OM Public Review: தனுஷுக்கு கை கொடுத்ததா ஓம்? ரசிகர்களின் கருத்து இதோ

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள  ஓம் திரைப்படம் இன்று  திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
 
Om movie review

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள  ஓம் திரைப்படம் இன்று  திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் தனுஷுடன் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து அவ்ரும் தனுஷ் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளார். ஆமரன் சூபப்ர் ஹிட் படத்தை கொடுத்த ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கியுள்ளார்.  சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தீபாவளியையொட்டி வெளியாகவிருந்த இப்படம் இன்று வெளியானது. தனுஷ் அரசியல்க் பிரவேசம் குறித்து சமீபகலமாக வரும் செய்திகளுக்கிடையே இப்படம் வெளியாவதால் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.   படத்தின் முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதி இரண்டுமே விறுவிறுப்பாக இருப்பதாக ஆரம்பகட்ட விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தனுஷின் நடிப்பும், சாய் பல்லவியின் அதிரடி காட்சிகளும் ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்று வருகின்றன.

மம்மூட்டியின் கதாபாத்திரமும் படத்திற்கு முக்கிய பலமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சாய் அபயங்கரின் பின்னணி இசை மற்றும் பிரம்மாண்டமான காட்சியமைப்புகளுக்கும் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.

குறிப்பாக இடைவேளை, காட்டில் நடைபெறும் சண்டைக் காட்சி மற்றும் கிளைமாக்ஸ் ஆகியவை படத்தின் முக்கிய சிறப்பம்சங்களாக விமர்சனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதேநேரத்தில் சில காட்சிகள் நீளமாக இருப்பது படத்தின் குறையாகச் சொல்லப்படுகிறது. ஒட்டுமொத்தமாக ‘ஓம்’ திரைப்படம் நல்ல கமர்ஷியல் பொழுதுபோக்குப் படமாக அமைந்துள்ளதாக ஆரம்பகட்ட விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.


ரசிகர்கள் சிலர் தங்களது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ள விமர்சனங்களை இங்கே காண்போம்.

om movie review

லக்மி காந்த் தனது எக்ஸ் பக்கத்தில்

 ஓம் – விறுவிறுப்பான இரண்டாம் பாதி! 

கதாபாத்திரங்களுக்கு இடையேயான மோதல்கள் மற்றும் இரண்டு அதிரடி சண்டைக் காட்சிகளுடன் இரண்டாம் பாதி விறுவிறுப்பாக நகர்கிறது.

நடிகர் தனுஷ் தனது தீவிரமான நடிப்பால் மிரட்டியுள்ளார். மம்மூட்டி மற்றும் சாய் பல்லவியின் கதாபாத்திரங்களும், அவர்களது நடிப்பும் சிறப்பாக அமைந்துள்ளன.

‘வீழ வீரா’ பாடல் காட்சியும், தனுஷின் எதிர்பாராத புதிய தோற்றமும் அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும்! 🔥

om movie review


அமுதா பாரதி எனபவர் தனது பக்கத்தில்

om movie review

 ஓம் – சிறந்த கமர்ஷியல் என்டர்டெயினர்! 🔥 

 - முதல் பாதி, இரண்டாம் பாதி இரண்டுமே சம அளவில் விறுவிறுப்பாக அமைந்துள்ளன. கமர்ஷியல் படத்திற்குத் தேவையான அனைத்து அம்சங்களும் சரியாக இடம்பெற்றுள்ளன.

 - இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளில் உணர்ச்சிகரமான தருணங்களை இயக்குநர் சிறப்பாகக் கையாண்டுள்ளார்.

 - தனுஷ் மற்றும் சாய் பல்லவியின் நடிப்பு படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. மம்மூட்டிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

 - சாய் அபயங்கரின் பின்னணி இசை ஒவ்வொரு காட்சியையும் மேலும் மெருகேற்றியுள்ளது. பாடல்கள் இடம்பெறும் இடங்களும் சிறப்பாக அமைந்துள்ளன.

  சில காட்சிகள் நீளமாக இருப்பதும், கதையின் முக்கியமான திருப்பங்கள் டிரெய்லரிலேயே வெளிப்படுத்தப்பட்டிருப்பதும் படத்தின் குறைகளாக உள்ளன.

  காட்டில் நடைபெறும் அதிரடி சண்டைக் காட்சி திரையரங்கில் ரசிகர்களுக்குச் சிலிர்ப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

 பிரம்மாண்டமான படமாக்கமும், ஒவ்வொரு காட்சியிலும் தெரியும் தரமான ஒளிப்பதிவும் படத்திற்குக் கூடுதல் பலம் சேர்த்துள்ளன.

 மொத்தத்தில், ஓம்  ரசிகர்களை ரசிக்க வைக்கும் விறுவிறுப்பான கமர்ஷியல் என்டர்டெயினர்! 🔥

என்று பதிவிட்டுள்ளார்.

om movie review

ஸ்டோடியோ பிளிக்ஸ் தனது பக்கத்தில்,

 ஓம் விமர்சனம் – 3.75/5  

வலுவான கதைக்களத்துடன் உருவாகியுள்ள  ஓம் திரைப்படம், நடிகர்களின் சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்துள்ளது.

 சாய் பல்லவி தனது வழக்கமான நடிப்பு எல்லைகளைத் தாண்டி அசத்தியுள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் அவரது நடிப்பு மிரட்டலாக அமைந்துள்ளது.

 மம்மூட்டி அப்பாவித்தனமும் குற்ற உணர்ச்சியும் கலந்த தனது கதாபாத்திரமாகவே மாறி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

 தனுஷ்  பல இடங்களில் அமைதியான அதே நேரத்தில் அழுத்தமான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.

 ஸ்ரீலீலாவுக்கு படத்தில் பெரிய அளவில் நடிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை.

 சாய் அபயங்கரின் பின்னணி இசை  படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. கிளைமாக்ஸ் காட்சியும் திருப்திகரமாக உள்ளது.

 மொத்தத்தில், வலுவான கதைக்களம், சிறந்த நடிப்பு, மிரட்டலான பின்னணி இசையுடன்  ஓம்  ரசிகர்களைக் கவரும் திரைப்படமாக அமைந்துள்ளது! 

 மதிப்பீடு: 3.75/5  என்று பதிவிட்டுள்ளார்.

மொத்தத்தில் ஓம் படத்தை சமூக வலைதளங்களில் பலரும் பாரட்டி வருகின்றனர்.

Sai Vikas
Sai Vikas

126 Articles

Sai vikas is an experienced digital journalist with 16years of expertise in online news reporting. He specializes in covering cinema and sports

From Around the web