திரிஷ்யம் 3 விமர்சனம்... தொடர் வெற்றியை தக்க வைக்குமா?
திரிஷ்யம் 3:
மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி சக்கை போடு போட்ட திரைப்படம் தான் திரிஷ்யம். இந்த திரைப்படத்தில் இரண்டாம் பாகம் வெளியாகியது. தொடர்ந்து தற்போது மூன்றாம் பாகம் வெளியாகய படத்தின் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
இந்த திரைப்படத்தின் விமர்சனத்தை காணலாம்.... ஜித்து ஜோசப் இயக்கத்தில் மோகன் லால் மீனா உள்ளிட்டோர் நடித்து வெளிவந்து சக்கை போடு போட்டு வரும் திரைப்படம் தான் திரிஷயம் 3 இந்த திரைப்படத்தின் இரண்டு பாகங்கள் ஏற்கனவே வெளியான நிலையில் இப்படத்தின் மூன்றாம் பாகமும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது.
படத்தின் கதை:

முதல் இரண்டு பாகங்களிலுமே கொல்லப்பட்டு இருந்தாலும் மன்னிப்போம் மறப்போம் என்ற பாவத்தில் இருந்த சித்திக் கதாபாத்திரம் இதில் நேர் எதிராக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆம் காவல்துறையும் நீதிமன்றத்திலும் வரும் கிளைமாக்ஸ் காட்சி என்பது படத்தின் விறுவிறுப்பான நகர்வு படத்தின் மீதான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறது .
குடும்பத்தை காப்பாற்ற ஜார்ஜ் குட்டி என்ன வேண்டுமானாலும் செய்வார் என்பதை மீண்டும் இப்படம் மூலமாக படத்திற்கு ரசிகர்களுக்கு எடுத்துரைக்கிறார். நிதானமான கதை... பொருத்தமான திரைக்கதை... திருப்திகரமான கிளைமாக்ஸ் இப்படி திரைப்படத்தில் பிளஸ் விஷயங்கள் அடுக்கிக் கொண்டே போகலாம்.

சென்சுரி அடித்த திரிஷ்யம் 3:
ஒவ்வொரு காட்சியிலும் மோகன்லால் நடிப்பு அபார விதமாக இருக்கிறது. மிகவும் மெனக்கெட்டு எல்லோரும் நடித்திருக்கிறார்கள். படத்திற்கு இசை கூடுதல் பலத்தை கொடுக்கிறது. ஒட்டுமொத்தமாக திரைப்படத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே இந்த மூன்றாம் பாகமும் திருப்திகரமாக அமைந்தது. மேலும் நான்காவது பாகத்திற்கு லீட் கொடுத்து படத்தை முடித்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
