தனுஷ் படம் மாதிரி இல்ல.. சாய் பல்லவிதான் ஹீரோ!.. புலம்பும் ரசிகர்கள்...

 
om movie

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்து இன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ஓம். இந்த படத்தில் மம்முட்டி, சாய் பல்லவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். இந்த படம் இன்று காலை வெளியான நிலையில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வருகிறது.

குறிப்பாக, தனுஷ் ரசிகர்கள் அல்லாத பொதுவான ரசிகர்களை ஓம் திரைப்படம் கவரவில்லை.. அதற்கு காரணம் முதல் பாதி சுமாராக இருக்கிறது.. இரண்டாம் பாதி பரவாயில்லை.. படத்தின் 3 மணி நேர நீளம் படத்திற்கு பெரிய மைனஸ் என பலரும் சொல்கிறார்கள்..

ஏற்கனவே தெரிந்த கதை என்றாலும் அதை இன்னும் சுவாரசியமாக சொல்லியிருக்கலாம். படம் மிகவும் ராவாக இருக்கிறது.. படம் கமர்சியலாக இல்லை.. தனுசை விட சாய் பல்லவியின் கதாபாத்திரம் நன்றாக இருக்கிறது. பெரிய எதிர்பார்ப்போடு படத்திற்கு போனால் கண்டிப்பாக ஏமாற்றம் அடைவீர்கள்.. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றால் ஒருமுறை பார்க்கலாம்.. அவ்வளவுதான்’ என பலரும் சொல்கிறார்கள்.

சிலர் படத்தைக் காப்பாற்றியிருப்பது சாய் அபயங்கர்தான்.. அவரின் பின்னணி இசையில்தான் படம் பார்க்க முடிகிறது.. மற்றபடி படம் நன்றாக இல்லை.. தனுஷ் நன்றாக கதையை கேட்டு நடிக்க வேண்டும்.. தொடர்ந்து தோல்வி படங்களை அவர் கொடுத்து வருகிறார் எனவும் சில ரசிகர்கள் சொல்கிறார்கள்..

சிலரோ ‘இது தனுஷ் படம் மாதிரியும் இல்லை.. ராஜ்குமார் பெரியசாமி படம் மாதிரியும் இல்லை.. எதிர்பார்த்து வந்தால் ஏமாந்து போவீர்கள்.. படம் சுமார்தான்’ எனக் கூறுகிறார்கள்..

Murugan ..
Murugan ..

5182 Articles

Murugan Manickam is an experienced digital journalist with 10 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news. Con tact: mugas123@gmail.com

Tags

From Around the web