ஆஸ்கருக்குப் போகும் கோந்தள்... படம் எப்படி இருக்கு? பட்டையைக் கிளப்பும் புளூசட்டைமாறன் விமர்சனம்!

 
gondhal, bluesattaimaran

சந்தோஷ் தவக்கார் இயக்கத்தில் வெளியான படம் கோந்தாள். இந்தப் படம்தான் இந்த வருஷம் இந்தியாவுல இருந்து ஆஸ்கருக்குப் பரிந்துரை செய்யப்பட்டு இருக்கு. இது ஒரு மராத்தி படம். தமிழ்ல மட்டும் இல்லாமல் பல்வேறு மொழிகள்ல ரிலீஸ் ஆகியிருக்கு. மகாராஷ்டிராவில ஒரு கிராமத்துல ஒரு கல்யாணம் நடக்குது. அந்தக் கல்யாணத்துல கோந்தல்னு சொல்லக்கூடிய கல்யாணத்தோட சேர்ந்த ஒரு கலை நிகழ்ச்சி. இதுக்கும், கல்யாணத்துக்கும் சம்பந்தம் உண்டு.

இந்த கலை நிகழ்ச்சியை எதுக்கு நடத்துறாங்கன்னா ஊருல இருக்குற கெட்டதை எல்லாம் துடைச்சி எடுக்கும் கடவுள்னு ஒரு நம்பிக்கை உண்டு. அதுபடி ஊருல இருக்குற மொள்ளைமாரி, முடிச்சிவிக்கி, அதிகாரம் பண்றவன், அழிச்சாட்டியம் பண்றவன் இவனை எல்லாம் கடவுள் காலையிலக்குள்ள ஒழிச்சிடும். அப்படி இரவு முழுக்க நடக்கற சாங்கியம், சம்பிரதாயம்தான் இது. அப்படி நடக்குற போது இவங்க சாங்கியம், நம்பிக்கை நிறைவேறிச்சாங்கறதுதான் கதை.

படம் முழுக்க நிறைய கேரக்டர் இருக்கு. ஒவ்வொண்ணையும், அறிமுகப்படுத்துறாங்க. கெட்டவன் யாருன்னும் சொல்றாங்க. செகண்ட் ஆஃப் வர்றதுக்குள்ள ரொம்ப டயர்டாக்கிடுறாங்க. செகண்ட் ஆப் நம்ம நினைச்சதுக்கு மேல எந்த ஒரு கேள்வியும் கேட்க முடியாத அளவுக்குப் போகுது. சின்ன சின்ன டுவிஸ்ட். ரொம்ப வித்தியாசம். கிளைமாக்ஸ் நினைக்க முடியாத அளவுக்கு இருந்தது. ஆரம்பம், முடிவு ரொம்ப வித்தியாசம். ஆரம்பத்துல 25 நிமிஷம் சிங்கிள் ஷாட் பிரமாதமா இருந்தது.

இளையராஜா மியூசிக் ரொம்ப பிரமாதம். மராத்திய கல்சரோட ஒன்றிப் போகுறது நமக்கு ஒத்துவரல. அது கொஞ்சம் குறையா இருந்தது. அது நம்ம பிரச்சனை. படத்துல மையக்கதையே ஹீரோயினைச் சுத்தித்தான் இருக்கும். இது உலக சினிமா, வித்தியாசமான சினிமாக்களைப் பார்க்குறவங்களுக்கு ஓகே ரகமான படம் என்கிறார் பிரபல யூடியூபர் புளூசட்டை மாறன்.   

sankaran v
sankaran v

3103 Articles

Sankaran is an experienced digital journalist with 10 years of expertise in online news reporting. He specializes in covering cinema and old cinema storiees

Tags

From Around the web