Meesaya Murukku 2 Movie Review : ஹிப்ஹாப் தமிழாவின் மீசைய முறுக்கு 2 எப்படி இருக்கு?... ட்விட்டர் விமர்சனம்!
'மீசைய முறுக்கு 2' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
Sep 25, 2026, 15:06 IST
ஹிப்ஹாப் தமிழா இசையமைத்து, இயக்கி, நடித்திருக்கும் புதிய படம் தான் 'மீசைய முறுக்கு 2'. இதில் ஆதி ட்ரிபிள் ஆக்ஷனில் நடித்துள்ளார்.
இப்படம் இன்று (செப்டம்பர் 25-ஆம் தேதி) உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தில் முக்கிய வேடங்களில் கெட்டிகா ஷர்மா, சைத்ரா ஜே ஆச்சார், ரம்யா ரங்கநாதன், கருணாஸ், பாபா பாஸ்கர், நாசர் ஆகியோர் நடித்துள்ளார்கள்.
இதற்கு பாலாஜி சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தங்களது விமர்சனத்தை பதிவிட்ட வண்ணமுள்ளனர்.
