Mask: டைட் திரில்லர் வித் எமோஷன்ஸ்!.. மாஸ்க் படம் எப்படி இருக்கு?.. ரசிகர்கள் சொல்வது என்ன?...
இயக்குனர் வெற்றிமாறனும் நடிகை ஆண்ட்ரியாவும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் மாஸ்க். இந்த படத்தில் கதாநாயகனாக கவின் நடிக்க ஆண்ட்ரியாவும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் இன்று காலை திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை விகர்ணன் அசோக் என்பவர் இயக்கியுள்ளார்.
முதல் காட்சியை பார்த்த சிலர் படம் எப்படி இருக்கிறது என்பதை ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். பெரும்பாலானவர்கள் படம் சிறப்பாக இருப்பதாக பதிவிட்டு வருகிறார்கள். சிலர் மட்டுமே ஆவரேஜ் என சொல்கிறார்கள்.

நல்ல திரில்லர் காட்சிகளோடு குடும்ப எமோஷனல் காட்சிகளும் இருக்கிறது. இதுபோக ஆக்சன், ரொமான்ஸ் மற்றும் காமெடியும் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. கவின் மற்றும் ஆண்ட்ரியா இருவரின் நடிப்புமே அருமை. படத்தின் 4-5 காட்சிகள் கண்டிப்பாக ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸை ஏற்படுத்தும். கண்டிப்பாக தியேட்டரில் பார்க்க வேண்டிய படம் என ஒருவர் பதிவிட்டு இருக்கிறார்.

மாஸ்க் ஒரு தரமான திரைக்கதை மற்றும் ஒரு சரியான உருவாக்கம். போய் பாருங்கள் என ஒருவர் பதிவிட்டுள்ளார். கவின் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆனால் ஆண்ட்ரியாவின் நடிப்பு செயற்கைதனமாக இருக்கிறது. சில காமெடி காட்சிகள் நன்றாக இருக்கிறது. சில காமெடி காட்சிகளும், இடைவேளை காட்சியும் ஓகே. வசனங்கள் நன்றாக இருக்கிறது. படத்தில் இடம்பெற்றிருக்கும் டார்க் நைட் காட்சிகள் நன்றாக இருக்கிறது. சாதாரண கதைதான். சிறப்பாக ஒன்றுமில்லை.. ஆவரேஜ்’ என ஒருவர் பதிவிட்டு இருக்கிறார்.

மாஸ்க் ஒரு நல்ல திரில்லர்.. இரண்டாம் பாதியில் படம் வேகமெடுக்கிறது. ஆண்ட்ரியா அசத்தலாக நடித்திருக்கிறார்.. கவின் ஆண்ட்ரியா இடையே வரும் காட்சிகள் சிறப்பு. மாநகரத்திற்கு பின் சார்லி சிறப்பாக நடித்திருக்கிறார்.. ஜிவி பிரகாஷின் பின்னணி இசை சிறப்பு.. கண்டிப்பாக பார்க்கலாம்’ என ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.

twitterமாஸ்கு ஒரு நல்ல திரில்லர் படத்தின் இரண்டாம் பாதியில் வேகமாக செல்கிறது ஆண்ட்ரியா அசத்தலாக நடித்திருக்கிறார் கவின் மாரியாவும் இடையே வரும் காட்சிகள் சிறப்பு சார்லி நடிக்கும் நன்றாக இருக்கிறது ஜீவி பிரகாஷின் பின்னணி இசை சிறப்பு கண்டிப்பாக பார்க்கலாம் என ஒருவர் பதிவிட்டு இருக்கிறார்.
