அடுத்த ப்ளாக்பஸ்டர் ரெடி.. ‘மிடில் கிளாஸ்’ படத்தின் முதல் விமர்சனம் இதோ..
கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் காமெடி நடிகர் முனீஷ்காந்த் ஹீரோவாக நடித்துள்ள படம் மிடில் கிளாஸ். இந்தப் படத்தில் விஜயலட்சுமி ஹீரோயினாக நடித்துள்ளார்.இவர்களுடன் ராதாரவி, குரோஷி, வேல ராமமூர்த்தி என பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் 21 ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.மிடில் கிளாஸ் என்றாலே தினமும் ஒரு போராட்டம் குடும்பத்தில் இருக்கத்தான் செய்யும்.
இன்று நம்மில் பல பேர் அதை அனுபவித்து வருகிறோம். எதையும் நினைத்த நேரத்தில் வாங்க முடியாது. ஆசைப்பட்டாலும் பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியிருப்போம். அதனால் அந்த ஆசை வெறும் கனவாகவே போய்விடும். சிக்கனம் என்பது மட்டுமே நம் மனதில் ஓடிக் கொண்டிருக்கும். இதனால் பல குடும்பங்களில் பிரச்சினைகளும் வெடித்திருக்கின்றன.
கணவன் மனைவி புரிதல் இருந்தால் என்ன மாதிரியான பிரச்சினை வந்தாலும் அதை சமாளித்துவிடலாம். ஆனால் அந்த புரிதல் இல்லாத நேரத்தில் பெரிய பூகம்பமே வெடிக்கும். அப்படிப்பட்ட ஒரு படமாகத்தான் மிடில்கிளாஸ் படம் அமைய இருக்கிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல ஒரு ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது.
அந்த வகையில் நேற்று இந்தப் படத்தின் சிறப்பு காட்சியை பத்திரிக்கையாளர்களுக்கு போட்டுக் காட்டியிருக்கிறார்கள். படம் பார்த்த ஒரு சில பேர் அந்தப் படத்தை பற்றி விமர்சனம் செய்துள்ளனர். அது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன. இந்தப் படம் முற்றிலும் ஒரு எதார்த்தத்தை வெளிப்படுத்தக் கூடிய படமாக இருக்கிறது. அரசியலிலிருந்து வேறுபட்டதாகவும் இருக்கிறது.

நேரடியாக நம் இதயத்தை வருடும் திரைப்படமாகவும் இருக்கிறது. கண்டிப்பாக ஒரு பிளாக்பஸ்டர் அளவுக்கு வெற்றியடையக் கூடிய எல்லா சாத்தியக் கூறுகளும் இந்தப் படத்தில் இருப்பதாகவும் கூறி வருகிறார்கள். சமீபகாலமாக தமிழ் சினிமாவில் இந்த மாதிரி குறும்பட்ஜெட்டில் வெளியாகக் கூடிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. மாஸ், ஆக்ஷன் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களுக்கு மவுசு குறைந்துவிட்டதாகவே தெரிகிறது.
