அதரப்பழசான மூக்குத்தி அம்மன் 2: ஒழுங்கா உழைச்சி படம் எடுக்க வேண்டியதானே... விளாசும் புளூசட்டை மாறன்..!

 
mookkuthi amman 2, bluesattai maran

இயக்குனர் சுந்தர்.சி. இயக்கத்தில் தீபாவளியையொட்டி நேற்று வெளியான படம் மூக்குத்தி அம்மன் 2. நயன்தாரா போலீஸ் கான்ஸ்டபிளா இருக்காங்க. அவங்களுக்கு அடிக்கடி ஒரு கனவு வருது. அதுல ஒரு அமானுஷ்ய சக்தி வந்து டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டே இருக்கு. அது என்ன சொல்ல வருதுன்னா நீ வந்து மைலாஞ்சிக்குப் போணும்னு சொல்லிக்கிட்டே இருக்கு. ஒரு சந்தர்ப்பம் கிடைக்குது. அவங்க மைலாஞ்சிக்குப் போறாங்க. 2000 வருஷத்துக்கு முன்னால ஒரு துர்சக்திக்கு லட்சியம் இருந்துருக்கு.

அதை அடைய முடியாததனால இப்ப அந்த துர்சக்திக்கு அந்த லட்சியத்தை அடைய அதுக்கான காலசூழ்நிலை கூடி வருது. அதனால மறுபடியும் அது புறப்பட்டு வருது. அது நிறைவேறாத ஆசையை நிறைவேற்ற புறப்பட்டு வருது. அதுக்கும் நயன்தாராவோட டிரான்ஸ்பருக்கும் என்ன சம்பந்தம்? அதுக்கு அப்புறம் என்னாச்சுங்கறதுதான் படத்தோட கதை. சுந்தர் சி. படம். கலகலப்பா, காமெடியா இருக்கும்னு பார்த்தா படம் முடியுற வரைக்குமே அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை.

ரெண்டரை மணி நேரம் படம் ரெண்டு மூணு நாள் ஓடுற மாதிரி இருந்துச்சு. ரொம்ப கஷ்டப்பட்டு நேரத்தை தள்ளுற மாதிரி இருந்துச்சு. அதுக்கு முக்கியமான விஷயம் இந்தக் கதையில 2 விஷயம் வருது. நிகழ்காலத்துல நடக்குறது. கடந்த காலத்துல நடக்குறது. கடந்த காலத்துல இந்த துர்சக்தி ஒரு முயற்சி பண்ணி அது தோல்வி அடையுதுன்னு சொல்லிடுறாங்க. அது எப்படி தோல்வி அடையுதுங்கறதை ஒரு முழுநீள படமா காட்டுறாங்க. அதுக்கு சின்ன பிளாஷ்பேக் இருந்தா போதாதா? அதுபாட்டுல போய்க்கிட்டே இருக்கு. அதை யாரு கேட்டா?

அதுமட்டும் இல்லாம, இந்த கடந்த காலமும், நிகழ்காலமும் கொஞ்சம் கூட பொருந்தவே இல்லை. மகதீரா படமும் இதுமாதிரி கதைதான். அது நேர்த்தியா இருந்துச்சு. அது துளி கூட இந்தப் படத்துல இல்லை. கேஜிஎப், பாகுபலி, புஷ்பா 2 புகழ்னு போட்டு பழைய அழுக்கு மூஞ்சியா இந்தப் படத்துல போட்டு அவங்க எல்லா படத்துலயும் வராங்க. அதே நடிப்பைத்தான் நடிக்கிறாங்க. இனிமே அந்த மூஞ்சியை எல்லாம் பயன்படுத்தாதீங்க. யோகிபாபுவையும் கேவலமா மேக்கப் போட்டு வச்சிருக்காங்க.

கிராபிக்ஸ் விட்டலாச்சார்யார் படம் மாதிரி இருக்கு. இப்ப ராமாயணா படம் வந்துருக்கு. மூணே கால் மணி நேரம் ஓடுது. அது எப்படி போச்சுன்னே தெரியல. அதுல அவ்ளோ சூப்பர் மேக்கிங். இந்தப் படம் அதர பழசாப் போச்சு. அதுக்கு முக்கியமான காரணம் இந்த சிஜி ஒர்க் தான். படம் எடுக்குறவங்க ஒழுங்கா உழைச்சிப் படம் எடுக்காம, படம் பார்க்க வந்தவங்களா கஷ்டப்பட்டு படம் பார்க்குறது? அந்த மாதிரி ஆகிப்போச்சு படம் என்கிறார் புளூசட்டை மாறன். 

Tags

From Around the web