Mookuthi amman 2 Review: மிரட்டும் நயன்தாரா... மூக்குத்தி அம்மன் 2 முதல் பாதி விமர்சனம்

நயன்தாரா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மூக்குத்தி அம்மன் 2  திரைப்படத்தின் முதல் பாதி குறித்த விமர்சனத்தை ரசிகர் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்
 
mookuthi amman 2 review

நயன்தாரா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மூக்குத்தி அம்மன் 2  திரைப்படத்தின் முதல் பாதி குறித்த விமர்சனத்தை ரசிகர் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 
கடந்த 2020ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான  மூக்குத்தி அம்மன்  திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் இயக்கிய அந்தப் படத்தில் நயன்தாரா அம்மன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆர்.ஜே.பாலாஜி, ஊர்வசி, மௌலி உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இப்படம் பக்தி, நகைச்சுவை மற்றும் சமூக கருத்துகளை மையமாகக் கொண்டு உருவாகியிருந்தது. குறிப்பாக போலிச் சாமியார்கள் குறித்த காட்சிகள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன.

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து  மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை ஆர்.ஜே. பாலாஜிக்கு பதில் இயக்குநர் சுந்தர் சி இயக்கியுள்ளார். நயன்தாரா மீண்டும் அம்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரெஜினா கசாண்ட்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.

mookuthi amman 2

இந்நிலையில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் முதல் பாதி குறித்த விமர்சனம் ஒன்று ராஜ சேகர் என்பவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் 

'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் முதல் பாதியில் நயன்தாராவுக்கு மாஸான காட்சிகள் அமைந்துள்ளன. குறிப்பாக குழந்தை சம்பந்தப்பட்ட காட்சி, சிங்கச் சிலை காட்சி மற்றும் திரிசூலக் காட்சி ஆகியவை வேற லெவலில் இருக்கின்றன! 🔥💥

நடிகை ரெஜினா கசாண்ட்ராவுக்கும் மிரட்டலான அறிமுகக் காட்சி கொடுக்கப்பட்டுள்ளது. படத்தின் முக்கிய வில்லியாக அவர்தான் இருப்பார் என்று தோன்றுகிறது.

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. அவரும் இந்தப் படத்தின் மற்றொரு சைலண்ட் ஹீரோ என்றே சொல்லலாம் என்று பதிவிட்டுள்ளார்.  முதல் பாதியில் கிடைத்துள்ள இந்த வரவேற்பை இரண்டாம் பாதியும் தக்கவைக்குமா? முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் ரசிகர்களைக் கவருமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

From Around the web