The Paradise Movie Review : நானியின் ஆக்ஷன் விருந்து சூப்பரா? சுமாரா?... தி பாரடைஸ் ட்விட்டர் விமர்சனம்!
நானி நடித்துள்ள ஆக்ஷன் பீரியட் டிராமா படம் 'தி பாரடைஸ்'.
Sep 24, 2026, 08:42 IST
தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் தெலுங்கு மொழி மட்டுமின்றி தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள புதிய படம் தான் 'தி பாரடைஸ்'.
இப்படம் இன்று (செப்டம்பர் 24-ஆம் தேதி) உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தை 'தசரா' இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியுள்ளார்.
இதில் ஹீரோயினாக கயாடு லோஹர் நடித்துள்ளார். நானிக்கு எதிராக மோதும் மிரட்டலான வில்லன் வேடங்களில் மோகன் பாபுவும், ராகவ் ஜூயலும் நடித்துள்ளனர். நடிகை கீர்த்தி சுரேஷ் 'Yeshanagula' என்ற பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளார்.
இதற்கு 'ராக்ஸ்டார்' அனிருத் தான் இசையமைத்துள்ளாராம். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தங்களது விமர்சனத்தை பதிவிட்ட வண்ணமுள்ளனர்.
