போயஸ் கார்டன்ல வீடு!.. ஆனா சொந்த ஊர்தான் சந்தோஷம்!.. ஓடிடியில் அடிவாங்கும் இட்லி கடை!...
                                    
                                தனுஷ் இயக்கி நடித்து வெளியான திரைப்படம்தான் இட்லி கடை. இந்த திரைப்படத்தில் தனுஷின் அப்பாவாக ராஜ்கிரண் மற்றும் சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய், நித்யா மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.சொந்த கிராமத்தில் இட்லி கடை வைத்திருக்கும் ராஜ்கிரண் தனது பாரம்பரிய தொழிலை தனக்கு பின்னால் தனது மகன் தனுஷ் செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறார். ஆனால் தனுஷுக்கோ வெளிநாடுகளில் சென்று வேலை செய்ய வேண்டும் என ஆசை. அவர் விருப்பப்படியே வெளிநாடுகளில் சென்று தன் திறமையை நிரூபிக்கிறார். ஆனால் அப்பாவின் மறைவுக்கு பின் அவரின் ஆசையை புரிந்து கொண்டு சொந்த ஊருக்கு வருகிறார்.

அங்கே வந்து அப்பாவின் இட்லி கடை நடத்துகிறார். இது தொடர்பான சென்டிமென்ட் காட்சிகளை திரைக்கதையாக அமைத்து படத்தை இயக்கியிருந்தார் தனுஷ்.இந்த படம் வெளியான முதல் இரண்டு நாட்களில் பீல் குட் படம் என பலரும் பாராட்டினார்கள். அதேநேரம் இந்த படத்திற்கு எதிர்பார்த்த வசூல் இல்லை. தற்போது இந்த படம் ஓடிடியில் வெளியாகியிருக்கிறது. தியேட்டரில் சரியாக போகாத சில படங்கள் ஓடிடியில் வரவேற்பை பெறும். ஆனால் தியேட்டரில் ஓரளவுக்கு வரவேற்பை பெற்ற இட்லி கடை ஓடிடியில் வந்தபின் ட்ரோலில் சிக்கியிருக்கிறது..

‘சொந்த ஊரை விட்டு சென்னை வந்து போயஸ் கார்டனில் பெரிய பங்களா கட்டி குடியிருந்து, ஆனால் சொந்த ஊரில் இருக்கிறது தான் பெருமை, நிம்மதி என்று படம் எடுத்திருக்கிறார் தனுஷ்’ என ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.அதேபோல் ஒரு தந்தை வியர்வை சிந்தி உழைப்பது தான் பட்ட கஷ்டத்தை தனது மகனும் படக்கூடாது என்பதற்காகத்தான். ஆனால் இட்லி கடையில் அதற்கு நேர்மான கருத்தை சொல்லி இருக்கிறார் தனுஷ். அதிலும் ராஜ்கிரனை அந்த கதாபாத்தில் நடிக்க வைத்து அவமானப்படுத்தி இருக்கிறார்’ எனவும் அவர் பதிவிட்டிருக்கிறார்.

ஒரு பக்கம் ‘உன்கிட்ட இருந்து எத வேணாலும் பறிச்சிடலாம். ஆனா படிப்ப மட்டும் பறிக்க முடியாது’ அப்படின்னு அசுரன் தனுஷ் சொல்றார்.. ‘நீ எதை வேணாலும் இழக்கலம். ஆனா அப்பாவோட குல தொழிலை மட்டும் இழக்கக்கூடாது’ன்னு இட்லி கடைல தனுஷ் சொல்றார். இப்ப நாங்க படிக்கவா? இல்ல குலத்தொழில் செய்யவா?’ என தனுஷ் ரசிகர்கள் கேட்பது போல மீம்ஸ்களையும் சிலர் வைரலாக்கி வருகிறார்கள். மொத்தத்தில் ஓடிடியில் ரிலீசான பின் இட்லி கடை படத்திற்கு நிறைய நெகட்டிவ் விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கிறது.
