வில்லன் யாருன்னே தெரியல... படத்தைப் பார்த்தா குழம்பிடுவீங்க... ஓம் படத்தை வறுத்தெடுத்த புளூசட்டைமாறன்..!

 
bluesattaimaran, oam movie

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான படம் ஓம். இந்தப் படத்தில் ஆந்திரா காடுகளில் செம்மரக் கடத்தல் பண்றது தடுக்க முடியாத விஷயமா போய்க்கிட்டு இருக்கு. இதை பாரஸ்ட் டிபார்ட்மெண்டும், போலீஸ் டிப்பார்ட்மென்டும் சேர்ந்து கண்டுபிடிக்கிறாங்க. மம்முட்டி செம்மரக்கடத்தல் கும்பலுக்குத் தலைவனா இருக்காரு. அவருக்கு மேலயும் ஒரு தலைவன் இருக்கான். அவனையும் பிடிக்கணும். அதுக்கு நம்ம டீம்ல இருந்து ஒரு சீக்ரெட் ஏஜென்ட்ட அந்த டீமுக்குள்ள இறக்கி அவங்ககிட்ட இருந்து சீக்ரெட் எல்லாம் கலெக்ட் பண்ணிக் கொடுக்கணும்.

அதை வச்சி அந்த டீமைப் பிடிக்கணும்னு முடிவு பண்றாங்க. அதுல சீக்ரெட் ஏஜென்டா தனுஷைத் தேர்ந்தெடுக்குறாங்க. அவரு மம்முட்டி கூட பழகி அதுல அவங்க டீம்ல ஒரு ஆளாகி இவங்களுக்கு மெசேஜ் எல்லாம் கொடுக்க ஆரம்பிக்கிறாரு. அதுக்கு அப்புறம் என்னாச்சுங்கறதுதான் கதை. ஒரு ஸ்பை த்ரில்லருக்குத் தேவையான ஒரு வித்தியாசமான கதையைத் தான் தேர்ந்து எடுத்துருக்காங்க. ஆனா அந்தக் கதைக்குத் தேவையான சரியான திரைக்கதை, காட்சி அமைப்போ, நம்பகத்தன்மையான சீனோ இல்லை. ரொம்ப அபத்தமா இருக்கு. குறிப்பா சொல்லணும்னா ஃபர்ஸ்ட் ஸ்பையா வந்து தனுஷ் மம்முட்டிக்கிட்ட சேரணும்.

ஒரு உப்பு சப்பு இல்லாத காரியத்துக்காக மம்முட்டி தனுஷை நம்ப ஆரம்பிச்சிடுறாரு. எந்தளவுக்கு நம்புறாருன்னா முழு பொறுப்பையும் அவருக்கிட்ட கொடுக்குற அளவுக்கு நம்ப ஆரம்பிச்சிடுறாரு. அவரு அத்தனை வருஷமும் கட்டிக் காத்து வச்ச அந்த நெட்வொர்க்கை ஒரே நாள்ல கூட்டிட்டுப் போய் இங்கதான் நம்ம கட்டையை எல்லாம் மறைச்சி வச்சிருக்குறோம். இங்க தான் கடத்துறோம். அப்படின்னு மொத்த டீட்டெய்லையும் அவருக்கிட்ட சொல்லிட்டு இருக்காரு. அது மட்டும் இல்லாம கூட இருக்குற ஒருத்தன் சொல்றான்.

இவன்மேல சந்தேகமா இருக்கு. இவன்தான் போலீஸ் இன்ஃபார்மரா இருப்பான் போல இருக்குன்னு கரெக்டா கையைக் காட்டி சொல்றான். அதுக்கு அப்புறம் கூட மம்முட்டி கேரக்டருக்கு ஒரு துளி கூட சந்தேகம் வர மாட்டேங்குது. பொதுவா இந்த மாதிரி டானுங்க எல்லாம் எல்லாரையும் சந்தேகத்தோடுதான் பார்ப்பாங்க. அதுவும் கூட இருக்குறவன் சொல்ல ஆரம்பிச்சதும் அவனை ரொம்ப சந்தேகமா பார்ப்பாங்க. ஆனா அந்த சந்தேகம் மம்முட்டிக்கு கடைசி வரைக்கும் துளிகூட வரவே இல்லை. அதே மாதிரி இந்த அண்டர் கவர் ஆபீசர் எல்லாம் அவங்க வீட்டுக்கே தெரியாது அவர் என்ன தொழில் செய்றாருன்னு.

ஆனா அப்படிப்பட்ட  ஒரு அண்டர் கவர் ஆபீசரை கோர்ட் கூண்டுல நிக்க வச்சி அவர்கிட்ட ஸ்டேட்மென்ட் வாங்கிட்டு இருக்காங்க. நான் ஒரு அண்டர் கவர் ஆபீசர்னு சொல்லிட்டு அவரு ஸ்டேட்மென்ட் கொடுத்துட்டு இருக்காரு. இதெல்லாம் எவ்வளவு கேணத்தனமான சீனா இருக்குன்னு பார்த்துக்கங்க. அப்புறம் இந்த டோட்டல் ஆபரேஷனுக்கு இன்சார்ஜா இருக்குற சாய்பல்லவி இவரு ஸ்பாட்டுக்கு வந்து அவரை சந்திச்சிட்டு போறாங்க. இதெல்லாம் வந்து இன்னைக்கு இருக்குற இன்டர்நெட் காலத்துல நேர்ல வரவேண்டிய அவசியம் என்ன இருக்கு? படம் போக போக மம்முட்டி கேரக்டர்தான் ஸ்ட்ராங்கா இருக்கணும்.

ஆனா அந்த கேரக்டர் ஜெயிலர் 2 படத்துல வர்ற மூர்த்தி அண்ணன் கேரக்டர் மாதிரி ஆகிப்போச்சு. இந்த மாதிரி படத்துல எல்லாம் போக்கிரி மாதிரி முழுக்க மசாலா படமா எடுத்துறணும். இல்லன்னா முழுக்க ரியலா தைரியமா அப்படியே சொல்ற மாதிரி ராவா எடுக்கணும்.  ஆனா இந்த படத்துல உண்மைக்கு நெருக்கமா எடுக்குறன்னு சொல்லிட்டு படத்துல வர்ற ஆந்திரா கேரக்டர் எல்லாம் தெலுங்கு பேசிட்டு இருக்கு. அதுக்கு சப் டைட்டில் போட்டுட்டு இருக்காங்க. அப்புறம் இடையில இங்கிலீஷ் பேசுறாங்க.

அதுக்கு சப் டைட்டில். அப்புறம் மெய்ன் வில்லன் நஸ்ரின் ஷா வரும்போது இந்தி பேசுறாரு. அதுக்கு சப் டைட்டில் போடுறாங்க. இதெல்லாம் எதுக்கு? படத்துலயே வெயிட்டான கேரக்டர் மம்முட்டிதான். அதையே டைல்யூட்டா மாத்திட்டாங்க. ஒரு சீன்ல நீங்க அப்ரூவரா மாறிடுங்கன்னு சொல்ல, நான் உயிரே போனாலும் கூட இருக்குறவன காட்டிக் கொடுக்க மாட்டேங்கறாரு. அடுத்த சீன்ல உங்க புள்ளைக்குட்டிகளோட, குடும்பத்தோட நிம்மதியா இருக்கலாம்னு சொன்னதும் அப்ரூவரா மாறிடுறாரு. அதுலயே படம் விழுந்து போச்சு. கடைசி ஃபைட்ல மம்முட்டி என்ன செய்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்காரு.

படத்துல வில்லன் யாருன்னே தெரியல. நஸ்ரீன் ஷாவும் மொக்கை வில்லனாதான் இருக்காரு. கட்டை கடத்துற இடத்துல அவ்ளோ பெரிய வில்லன் தேவையா? யாரை ஃபாலோ பண்றதுன்னே தெரியல. படம் மட்டும் தரிக்கெட்டு ஓடிக்கிட்டு இருக்கு. படம் முடிஞ்சா போதும் சாமின்னு தோணுது. கதையே குழப்பமான கதை. போலீஸ்ல இருக்குற அப்பாவி, நல்ல அதிகாரிய எல்லாம் கொன்னுட்டு இவரைப் போயி காப்பாத்திட்டு இருக்காங்க. இதைப் போய் பார்த்தீங்கன்னா உங்களுக்கு இதைவிட குழப்பமாகத்தான் இருக்கும் என்கிறார் பிரபல யூடியூபர் புளூசட்டை மாறன். 

sankaran v
sankaran v

3110 Articles

Sankaran is an experienced digital journalist with 10 years of expertise in online news reporting. He specializes in covering cinema and old cinema storiees

Tags

From Around the web