யஷ் மட்டும் தான் மிரட்டுறாரு!.. ரன்பீர் கபூர் உருட்டுறாரு!.. மெகா பட்ஜெட் ராமாயணா விமர்சனம் இதோ!..
2000 கோடி, 4000 கோடி என தயாரிப்பாளர் நமித் மல்கோத்ரா அடித்து விட்ட நிலையில், அந்தளவுக்கு படத்தில் என்ன இருக்கப்போகிறது என்று பார்த்தால் சிஜி காட்சிகளுக்கு அதிகப்படியான செலவை போட்டுள்ளனர் என்பது போலத்தான் ஸ்கிரீனில் தெரிகிறது.
ஹாலிவுட் படங்களான அவதார் போல மிகப்பெரிய பட்ஜெட்டில் விஷுவல் ட்ரீட்டுக்காகவே உருவாக்கிய இதிகாசமாக ராமாயணம் உள்ளது.
ஆரம்பத்திலேயே ரன்பீர் கபூரை ராமராக காட்டி கதையை ஆரம்பித்தால் ரசிகர்கள் அங்கேயே தூங்கி விடுவார்கள் என்பதால், ராவணனாக யஷ் நடித்துள்ள காட்சிகளையே அதிகம் காட்டி முதல் பாதியை ஓட்டி விட்டார் டைரக்டர்.
ரன்பீர் கபூர் இளவரசனாக இருந்தாலும் சரி, வனவாசத்தில் காவி உடை தரித்து இருந்தாலும் சரி ராமர் அதிகமாக பேச மாட்டார், அலட்டிக் கொள்ள மாட்டார் என இயக்குநர் சொல்லியிருப்பார் போலத் தெரிகிறது. இந்த முகத்துல நடிப்பே வராதா? என்பது போல அப்படியே சிலை போலவே பல சீன்களில் வந்து செல்கிறார்.
ஜெயிலர் 2வில் ரஜினிக்கு என்ன ஸ்லோமோ வைத்தார்கள், படம் முழுக்க ராமராக நடந்து வரும் காட்சிகளில் எல்லாம் ரன்பீர் கபூருக்கு வைத்திருக்கிறார்கள் போல ஸ்லோ மோஷன் என ரசிகர்கள் கொட்டாவி விடும் நிலைக்குத்தான் அவரது போர்ஷன் உள்ளது.
ஆனால், சீதையாக சாய் பல்லவி ஆரம்பத்தில் பெரிதாக பொருந்தாமல் இருப்பது போல தோன்றினாலும், வனவாசத்தின் போது அவரது நடிப்பும் ஆராவும் திரையை ஆக்கிரமிக்கிறது. சாய் பல்லவி சீதையாக சரியான தேர்வு இல்லை என்று சொன்னவர்களுக்கு எல்லாம் தனது நடிப்பால், அதையெல்லாம் பொய்யாக்கி உள்ளார். லக்ஷ்மணனாக பாலிவுட் நடிகர் ரவி துபே சூப்பராக நடித்துள்ளார். அவர் வரும் காட்சிகள் எல்லாமே கலகலப்பாக செல்கிறது. அதிலும், சூர்ப்பனகையாக வரும் ரகுல் ப்ரீத் சிங்கின் மூக்கை அறுக்கும் காட்சி அல்டிமேட்.
கிளைமேக்ஸில் ஜடாயு சண்டை தான் ஒட்டுமொத்த படத்திலேயே ஒர்த்தான சீனாக உள்ளது. அதுவும் யஷ் உடன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும், ராவணன் தலையை ஜடாயு அறுத்தெறும் காட்சிக்காக தாராளமாக ஒரு முறை படத்தை பார்க்கலாம்.
ரன்பீர் கபூருக்கு பதில், ஹ்ரித்திக் ரோஷன் உள்ளிட்ட வேறு யாராவது காஸ்ட் செய்திருந்தால் இன்னமும் இந்த ராமாயணா திரைப்படம் சிறப்பாக இருந்திருக்கும் என்று தான் தோன்றுகிறது.
ரேட்டிங்:3/5
