எப்படி இருக்குது ராமாயணா பார்ட் 1. கலாய்க்கிறாரா, பாராட்டுறாரா புளூசட்டை மாறன்?

 
Bluesattai maran, ramayana

நிதேஷ் திவாரி இயக்கத்தில் வெளியான படம் ராமாயணா. ரன்பீர் கபூர், யாஷ், சாய்பல்லவி நடித்த இந்த படத்திற்கு ஏஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். படத்தின் விமர்சனம் குறித்து பிரபல யூடியூபர் புளூசட்டை மாறன் என்ன சொல்றாருன்னு பாருங்க. 

300க்கும் மேற்பட்ட ராமாயணம் இருப்பதா சொல்றாங்க. தமிழ்ல கூட கம்பர் ராமாயணம் இருக்கு. தெலுங்கு, மலையாளத்துலயும் இருக்கு. சமஸ்கிருதத்துலயே நிறைய ராமாயணம் இருக்கு. இலங்கையில ஒரு ராமாயணம் இருக்கு. இதுமாதிரி தெற்காசியா முழுவதும் 300க்கும் மேற்பட்ட ராமாயணம் இருப்பதாக சொல்றாங்க. அதுல சின்ன சின்ன கேரக்டரை வித்தியாசப்படுத்தி அந்தக் கதைகளை எழுதிருப்பாங்க. ஒரு ராமாயணத்துல சீதை காளியா உருவெடுத்து ராவணனை வதம் செஞ்சதாக சொல்றாங்க.

இந்தக் கதை வால்மீகி ராமாயணத்தை மையமா வச்சித்தான் எடுத்துருப்பாங்க. பொதுவா நீளமா ஒரு விஷயம் சொன்னா ராமாயணம் மாதிரி வளவளன்னு போய்க்கிட்டு இருக்குன்னு சொல்வாங்க. அந்த மாதிரி ராமாயணம் நீளமானது. இந்தப் படத்தை 2 பார்ட்டா எடுத்து முதல் பார்ட் ரிலீஸ் பண்ணிருக்காங்க. ஒரு பார்ட் மூணே கால் மணி நேரம். இதுல முடிஞ்சளவுக்கு கிரிஸ்பா சொல்லிருப்பாங்க. சில நண்பர்கள் எல்லா கேரக்டரையும் கொஞ்சம் டீட்டெய்ல் பண்ணிருக்கணும்னு சொல்றாங்க.

எங்களைப் பொருத்தவரை அது தேவையில்லை. ஏன்னா ராமாயணம் கதை தெரியாதவங்களே இருக்க முடியாது. அதனால அந்த டீட்டெய்லுக்கு அவசியம் இல்லை. அதனால முக்கியமான பார்ட்டை எடுத்துக்கிட்டு பண்ணிருக்காங்க. ஆரம்பத்துல கொஞ்சம் நல்லா விறுவிறுப்பா போச்சு. இடையில கொஞ்சம் ஸ்லோவாச்சு. ஆனா போர் அடிக்கல. படம் நல்லாருந்தது. முதல் பாகத்துல ராவணன் சீதையைக் கடத்திக் கொண்டு போன பிறகு ராமன் என்ன முடிவு எடுத்தாருன்னு கதையை முடிக்கிறாங்க.

இதுல ராமனை பெரிசா காட்டுறதுக்கு வாய்ப்பு இல்லை. இதுக்கு அப்புறம் என்ன பண்றாருங்கறதுதான் அவரோட கேரக்டரைத் தூக்கிக் காட்டும். ஃபர்ஸ்ட் பார்ட்ல ராவணனுக்கு முக்கியத்துவம் கொடுத்துருப்பாங்க. அதனாலயே படம் விறுவிறுப்பா போச்சு. செண்ட் பார்ட் பார்க்க ஆவலையும் தூண்டுச்சு. எல்லாருக்கும் தெரிஞ்ச ராமாயணம் கதையை எடுத்து பண்றது ரிஸ்கான விஷயம். ஆனா கொஞ்சம்கூட பயப்படாம அவங்க விஷூவல் ட்ரீட் மேல வச்சிருந்த நம்பிக்கையில பண்ணிருக்காங்க.

விஷூவலா ரொம்ப அருமையா பண்ணிருக்காங்க. இதுவரைக்கும் வந்த இந்தியப்படங்கள்ல ஹாலிவுட் தரம் இதுதான். டெக்னிகல் ஒர்க் பிரமாதம். சிஜி ஒர்க்ல ஜடாயு ஃபைட், கிளைமாக்ஸ் புஷ்பக விமானம் வருவது பிரமாதம். இது இந்திப்படம். ஆனாலும் இதுல தமிழ்ல டப் பண்ணதோடு மட்டுமல்லாம ஏஐல கொடுத்து கேரக்டரோட லிப் மூவ்மெண்டும் அருமையா பண்ணிருக்காங்க.

இனி வரும் படங்கள் இப்படி பண்ணினா நல்லாருக்கும். சிம்மர், ஏஆர்.ரகுமான் மியூசிக் பண்ணிருக்காங்க. ஆரம்ப ஃபைட் சினிமா ஃபைட் மாதிரி போகுது. ஜடாயு ஃபைட் அட்டகாசம். செட் ஒர்க், காஸ்ட்யூம் சூப்பர். ராவணனா யாஷ் பிரமாதமா பண்ணிருந்தார். சாய்பல்லவி சீதையா நல்லா பண்ணிருந்தாங்க. ஆதி புருஷ் படத்தைப் பார்த்துட்டு இதைப் பார்க்க கொஞ்சம் பீதியோடத்தான் போனோம். ஆனால் படம் நம்ம எதிர்பார்த்ததை விட ரொம்பவே நல்லாருந்தது. ஃபேமிலி, குழந்தையோட பார்க்கலாம் என்கிறார் புளூசட்டை மாறன். 

Tags

From Around the web