Ram And Leela First Review : ரியோ ராஜின் ராம் அண்ட் லீலா எப்படி இருக்கு?... வெளியானது முதல் விமர்சனம்!

 
Ram And Leela

Ram In Leela Movie Review : ரியோ ராஜ் கதையின் நாயகனாக நடித்துள்ள புதிய படம் தான் 'ராம் அண்ட் லீலா'. இந்த படத்தை அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கியுள்ளார்.

இதில் ரியோ ராஜுக்கு ஜோடியாக வர்திகா நடித்திருக்கிறார். மேலும், முக்கிய வேடங்களில் தீபா வெங்கட், சேத்தன், பாலாஜி தியாகராஜன், லொள்ளு சபா சுவாமிநாதன், புஜ்ஜி பாபு, விஜயலக்ஷ்மி ஷங்கர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ரொமான்டிக் காமெடி ஜானர் படமான இதற்கு அங்கித் மேனன் இசையமைத்துள்ளார், மல்லிகா அர்ஜுன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.

படத்தை வருகிற ஆகஸ்ட் 21-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, இந்த படத்தின் ப்ரீமியர் ஷோவை பார்த்த பத்திரிக்கையாளர்கள் சிலர் எக்ஸ் தளத்தில் தங்களது விமர்சனத்தை பதிவிட்டுள்ளனர். 

From Around the web