Modha Rathri First Review : ரிஷிகாந்தின் மொத ராத்திரி எப்படி இருக்கு?... வெளியானது முதல் விமர்சனம்!

 
Modha Rathri

Modha Rathiri Movie Review : கதையின் நாயகனாக ரிஷிகாந்த் நடித்துள்ள படம் தான் 'மொத ராத்திரி'. ரொமான்டிக் காமெடி ஜானர் படமான இதை அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் ரிஷிகாந்துக்கு ஜோடியாக 'யூத்' புகழ் அனிஷ்மா அனில்குமார் தான் நடித்திருக்கிறார். மேலும், முக்கிய ரோல்களில் சேத்தன், ஏ.வெங்கடேஷ், பகவதி பெருமாள், அப்துல் லீ, சங்கீதா பாலன், வர்ஷினி கார்மேகம், சுமித்ரா தேவி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இதற்கு பரத் சங்கர் தான் இசை. ஆல்ரெடி வெளியான இதன் ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருந்தது. படத்தை வருகிற ஆகஸ்ட் 21-ஆம் தேதி தான் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப் போகிறார்கள்.

தற்போது, இப்படத்தின் ப்ரீமியர் ஷோவை பார்த்த பத்திரிக்கையாளர்கள் சிலர் எக்ஸ் தளத்தில் தங்களது விமர்சனத்தை பதிவிட்டுள்ளனர். 

From Around the web