Engal Thangam Review : சமந்தாவின் 'எங்கள் தங்கம்' எப்படி இருக்கு?... ட்விட்டர் விமர்சனம்!

 
engal thangam review

Maa Inti Bangaaram Review : கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் நடிகை சமந்தாவுக்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள புதிய படம் 'எங்கள் தங்கம்' (தெலுங்கில் 'மா இண்டி பங்காரம்').

இப்படம் இன்று (ஜூன் 19-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. ஆக்ஷன் டிராமா ஜானர் படமான இதன் கதை, திரைக்கதையை சமந்தாவின் கணவரும், இயக்குநருமான ராஜ் நிடிமோரு எழுதியுள்ளார். இதை பிரபல இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார்.

இதில் முக்கிய வேடங்களில் குல்ஷன் தேவ்வையா, திகாந்த் மஞ்சாலே, ஸ்ரீமுகி, கௌதமி, ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இதனை சமந்தாவே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'Tralala மூவிங் பிக்சர்ஸ்' நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது விமர்சனங்களை பதிவிட்ட வண்ணமுள்ளனர்.

From Around the web