இஷ்டத்துக்கு வளைச்சி வளைச்சி எடுக்குறாங்கப்பா... சத்தியவான் சாவித்திரியை வறுத்தெடுத்த புளூசட்டைமாறன்!

 
sathyavan savithri, bluesattai maran

இயக்குனர் பிரவீன் எஸ்.விஜய் இயக்கத்துல வெளிவந்துள்ள படம் சத்தியவான், சாவித்திரி. படத்தோட ஹீரோயின் ப்ரீத்தி சுரேஷ் லா படிச்சிருக்காங்க. பெரிய அட்வகேட்டா வரணும்னு ஆசை. ஆனா குடும்பத்துல கம்பல் பண்ணி கட்டாய கல்யாணம் பண்ணி வச்சிடுறாங்க. அதுக்கு அப்புறமும் இவங்களை லா படிக்கிறதுக்கு ஹஸ்பன்ட் அலோவ் பண்றாரு. அதனால ஒரு பெரிய அட்வகேட் கிட்ட போயிட்டு இவங்க ஜூனியரா ஜாயின்ட் பண்றாங்க. அந்த அட்வகேட் இதுவரைக்கும் எந்த ஒரு கேஸ்லயும் தோத்தது இல்லை. அவ்ளோ பெரிய அட்வகேட் அவரு. அவரு கேஸ் நடத்திட்டு இருக்கும்போது அந்த கேஸ்லயே இவங்களுக்க ஒரு முரண் ஏற்பட்டதனால அந்த கேஸ்ல அந்த அட்வகேட்டுக்கு எதிரா இவங்களே வாதாட ஆரம்பிச்சிடுறாங்க.

அந்த கேஸ்ல இவங்க ஃபர்ஸ்ட் கேஸ்லயே ஜெயிக்கவும் செய்றாங்க. இதனாலயே கான்டான மிஷ்கின் இவங்க மேல கடுப்புல இருக்காரு. இந்த சமயத்துல கீர்த்தி சுரேஷோட ஹஸ்பன்ட் மேல ஒரு கொலை கேஸ் விழுந்துடுது. அந்த கொலை கேஸ்ல இருந்து இவங்க காப்பாத்துறதுக்காக ஆஜராகும்போது ஏற்கனவே இவங்க மேல காண்டுல இருந்த மிஷ்கின் இவங்களுக்கு எதிரா ஆஜராகுறாரு. அதுக்கு அப்புறம் அவங்க ஹஸ்பன்ட்ட காப்பாத்துனாங்களா? இந்த கொலைக்கு யார் காரணம்? அப்படிங்கறதுதான் படத்தோட கதை. மொத்த படத்துலயும் ரெண்டு கேஸ்தான் வருது. ஆனா முழுநீள கோர்ட் ரூம் டிராமா.

ரெண்டு கேஸையும் வச்சிக்கிட்டு முழு படத்தையும் இழுக்குறதுக்கு சரக்கு இல்லை. ஃபர்ஸ்ட் ஆஃப் முழுக்க இவங்களுக்கு கல்யாணம் ஆனது, கோர்ட் போனது, கேஸை அட்டன்ட் பண்ணது. அது வக்கீலுக்கு எதிரா, அவங்க சீனியருக்கு எதிராவே வாதாடுனது. இது மட்டும்தான் இருக்குதே தவிர அந்த கேஸ்ல ஒண்ணும் உப்பு சப்புலாம் கிடையாது. இதை டீட்டைலா காமிக்கணும்கறதுக்காக ஏதோ மொக்கையா ஒரு கேஸை எடுத்து வச்சி வாதாடுறாங்க. அதுல எந்த ஒரு சுவாரசியமும் கிடையாது. அப்புறம் செகண்ட் ஆஃப்ல ஒரு கொலை கேஸ்ல இவங்க வாதாடுறாங்க. கொலை கேஸ்னா போலீஸ் இன்வால்வ் ஆயிடும்ல. போலீஸ்லாம் எதுலயும் இன்வால்வ் ஆகவே இல்லை.

கொலை கேஸை இவங்க இஷ்டத்துக்கு வளைச்சி வளைச்சி கோர்ட் ரூல்ஸ் எல்லாம் மாத்தி மாத்தி பண்ணிருக்காங்க. இதெல்லாம் பெரிய சுவாரசியமா இல்லை. இந்த மாதிரி கோர்ட் ரூம் டிராமா எல்லாம் நாம நிறைய பார்த்துட்டோம். அதை மிஞ்சிற அளவுக்கு ஒரு படம் இருந்தாதான் நாம ரசிக்க முடியும். ஆனா அந்தளவுக்கு இல்லை. லாஸ்ட் மினிட்ல ஒரு டுவிஸ்டை நம்பி பண்ணிருக்காங்க. இதைவிட பெரிய பெரிய டுவிஸ்டை எல்லாம் நாம பார்த்துட்டோம். அதுவும் இதுல நல்லா கெஸ் பண்ண முடியுது.

படத்துல கீர்த்தி சுரேஷூக்கு ஹீரோன்னா அவங்களுக்கு ஈக்குவலா போடணும். இதுல மொக்கையா ஒரு ஹீரோவை போடும்போது அதுல நமக்கு நிறைய சந்தேகம் வருது. அதுதான் படத்துலயும் நடந்து போச்சு. நிறைய கோர்ட் டிராமாவைப் பார்த்தாலும் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் மாதிரி பிரபலங்கள் நல்லாவே நடிச்சிருக்காங்க. இதை நாம ரசிக்கலாம். இந்த விஷயம்தான் படத்துல இருக்கு. அது தவிர பெரிசா டர்ன் டுவிஸ்ட், விசில் அடிக்கிற மாதிரி, கைதட்டுற மாதிரி பெருசா எதுவும் இல்லை. வழக்கமா ரொம்ப சாதாரணமான கோர்ட் ரூம் டிராமா தான் இந்தப் படம் என்கிறார் புளூசட்டை மாறன். 

sankaran v
sankaran v

3110 Articles

Sankaran is an experienced digital journalist with 10 years of expertise in online news reporting. He specializes in covering cinema and old cinema storiees

Tags

From Around the web