ஒப்பாரியா வைக்கும் ஹீரோ... விளங்குமா ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ வே? புளூசட்டைமாறன் பொளக்குறாரே!

 
spider man, bluesattai maran

இயக்குனர் டஸ்டின் கிரட்டன் இயக்கத்தில் வெளியான ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ வே படத்தின் விமர்சனத்தை பிரபல யூடியூபர் புளூசட்டை மாறன் தந்துள்ளார். என்னன்னு பாருங்க. 

இந்தப் படத்துடைய கதையைப் பத்திப் பார்த்தோம்னா போன பார்ட் எங்க முடிஞ்சுதோ அங்க இருந்துதான் இந்த பார்ட் துவங்குது. போன பார்ட்ல டாக்டர் ஸ்ட்ரேஞ் ஒரு வேலையை பார்த்து விட்டுருவாரு. அது என்னன்னா, ஸ்பைடர்மேன் தான் பீட்டர் பார்க்கர் அப்படிங்கற ஒரு விஷயத்தை உலகத்துல மறைச்சிருவாரு. இப்போ உலகத்துல யாருக்கும் தெரியலன்னா பரவாயில்ல. ஹீரோவுடைய கேர்ள் ஃப்ரண்டுக்கே அவர் யாருன்னு தெரியாமப் போயிடும்.

ஹீரோவுடைய க்ளோஸ் ஃப்ரண்டுக்கே இவரு யாருன்னு தெரியாது. இதுவே இவருக்குப் பெரிய மன உளைச்சலா இருக்குது. இந்த மன உளைச்சலுக்கு இடையிலும் அவர் வந்து இந்த நியூயார்க் சிட்டியைக் காப்பாத்துற கடமையில இருந்து தவறல. எந்த விஷயமா இருந்தாலும் போய் அடிச்சு தூள் கிளப்பிட்டு வந்துறாரு. இருந்தாலும் இவருக்கு இந்த ஒரு பெரிய மன உளைச்சல்னால இவருக்கு இருக்குற சூப்பர் பவர் கொஞ்சம் டிஸ்டர்ப் ஆகுது. இந்த சமயத்துல ஒரு வில்லன் வந்து பெரிய வேலையை செய்ய ஆரம்பிச்சிடுறான். அவன் ஹீரோயினை என்ன பண்றேன் பாருன்னு சவால் விட்டுறான்.

இதுக்கு இடையில ஒரு முரட்டு வில்லன் வேற வந்துறான். அவன் ஹீரோயினைக் கொல்லப் போறேன் பாரு அப்படின்னு கிளம்பிடுறான். இப்ப ஹீரோ அந்த வில்லன்கிட்ட இருந்து நாட்டைக் காப்பாத்துனாரா? ஹீரோயினைக் காப்பாத்துனாரா? அதுக்கு அப்புறம் என்னாச்சுங்கறதுதான் இந்தப் படத்தோட கதை. ஆக்ஷன் பிளாக்குகளுக்காகத் தான் இது மாதிரி ஸ்பைடர் மேன் படத்தை எல்லாம் பார்க்கப் போறோம். ஆனா இந்தப் படம் முழுக்க உட்கார்ந்து ஹீரோ ஒப்பாரி வச்சிக்கிட்டு இருக்காரு. ஒப்பாரி வச்சாருன்னா பரவாயில்ல. இடையில இடையில போய் சண்டை முடிச்சிட்டு வந்தாருன்னா பரவாயில்ல.

ரொம்ப நேரமா சண்டை போடுறாரு. அதுல 3 ஆக்ஷன் பிளாக் தான் நல்லா இருந்தது. படத்துல வில்லன் கூடு விட்டு கூடு பாய்றவன். அந்த வித்தை செய்யும்போதெல்லாம் அதை விஷூவலா நல்லா மிரட்டிருக்காங்க. ரொம்ப நல்லா இருந்தது. பொதுவா இந்த மாதிரி சூப்பர் ஹீரோ படங்கள்ல கேமியோன்னு ஏதாவது ஒரு கேரக்டரை உள்ளே சொருகுவாங்க. இந்தப் படத்திலும் ஒரு சூப்பர் ஹீரோ கேரக்டர் இருக்குது. அதை சொன்னா ஸ்பாயிலர்னு சொல்லிட்டு ஊளையிட்டவன் எல்லாம் கதறிட்டு இருப்பானுங்க. அதனால அதை சொல்ல முடியாது. வேணும்னா குளூ கொடுக்கலாம். முதல் இரண்டு எழுத்து HU ன்னு வரும்.

பின்னாடி 2 எழுத்து LK ன்னு வரும். ஆள் கொஞ்சம் பார்க்க பல்க்கா, பச்சைக்கலர்ல இருப்பாரு. இது ஊருக்கே தெரிஞ்சாலும் அதை நாங்க சொல்லக்கூடாது. சொன்னா ஸ்பாய்லர் ஆகிடும். அப்படின்னு நாங்க சொல்லக்கூடாது. படமே முடிஞ்சு இந்த போஸ்ட் கிரெடிட்டுக்காக என்ட்ல பார்த்தா இடைவேளையில பாப்கார்ன் வாங்கி சாப்பிட்ட டப்பாவை எல்லாம் தூக்கிப் போட்றாதீங்க. அதைப் பார்த்த உடனே புளிச்சுன்னு எச்சைக் காரித் துப்பலாமான்னு தோணும்.

அதை டப்பால துப்பி பக்கத்துல இருக்குற டஸ்ட் பின்ல போட்டுருங்க. எவன் மேலயாவது எச்சக் காரித் துப்பிடாதீங்க. படம் டெக்னிகல்லா வழக்கம் போல ரொம்ப ஸ்ட்ராங்கான படம். 3 ஸ்டண்ட் சூப்பர். இதுக்கு முன்னாடி சூப்பர் ஹீரோ படத்துல இல்லாதது இதுல என்ன இருக்குன்னா எதுவுமே இல்லை. இன்னொன்னு ரொம்ப நேரம் அழுவுறாரு. கொஞ்சம் நேரம்தான் சண்டை பிடிக்கிறாரு. அதுக்கு அப்புறம் உங்க இஷ்டம் என்கிறார் புளூசட்டை மாறன்.  

Tags

From Around the web