Magudam First Review : விஷாலின் மகுடம் எப்படி இருக்கு?... வெளியானது முதல் விமர்சனம்!
விஷால் இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் புது படம் தான் 'மகுடம்'. ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் படமான இதை விஷாலே தான் இயக்கியிருக்கிறார்.
இந்த படம் வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி சுதந்திர தின ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸ் ஆகப் போகிறது. தற்போது, இப்படத்தை பார்த்த பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் எக்ஸ் தளத்தில் "விஷாலின் 'மகுடம்' பக்கா ஆக்ஷன் கமர்ஷியல் எண்டர்டெயினர்.

அதுவும் குறிப்பாக க்ளைமேக்ஸ் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அது கண்டிப்பாக எல்லோரையும் சர்ப்ரைஸ் பண்ணும். படத்தில் இருக்கும் மூன்று பெரிய ஆக்ஷன் காட்சிகள் கண்டிப்பாக தியேட்டரில் பார்க்க ட்ரீட்டாக இருக்கும்.
#Magudam is an ambitious, audacious, grand and action packed commercial entertainer, directed and performed by @VishalKOfficial . Loved especially the climax sequence, which will surprise everyone. The three big action sequences will be a treat to watch on big screen 👍#Vishal… pic.twitter.com/BR2hUj9LmO
— G Dhananjheyan (@Dhananjayang) August 12, 2026
'லிங்கா'-வாக விஷால் சூப்பராக நடித்திருக்கிறார். அஞ்சலி, துஷாரா விஜயன், ஜான் விஜய், ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் நன்றாக நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் தனது பின்னணி இசை மற்றும் பாடல்கள் மூலம் படத்தின் விறுவிறுப்பை குறையாமல் பார்த்துக் கொண்டார். இயக்குநர் விஷால் கொடுத்திருக்கும் இந்த மாஸ் எண்டர்டெயினரை கண்டிப்பாக தியேட்டரில் பாருங்க" என்று பதிவிட்டுள்ளார்.