அப்ப ரைட்ஸும் வாங்கலயா?!.. சைலைண்டா அந்த கதையை ஆட்டைய போட்ட லோகேஷ்...

Leo: மாநகரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார். ஒரு இரவில் நடக்கும் கதைக்கு சுவாரஸ்யமான அதேநேரம், பரபர ஆக்‌ஷன் குறையாத திரைக்கதையை அமைத்து அசத்தியிருந்தார்.

அதன்பின் விஜயை வைத்து அவர் இயக்கிய மாஸ்டர் படமும் வெற்றிப்படமாக அமைந்தது. அதற்கு அடுத்து கமலை வைத்து லோகேஷ் இயக்கிய விக்ரம் படம் லோகேஷின் இயக்கத்தில் ஒரு முக்கிய படமாக அமைந்தது. இந்த படத்தில் பஹத்பாசில், விஜய் சேதுபதி என எல்லோருக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தார்.

இதையும் படிங்க: ஆஸ்கார் நாயகனையே தட்டி வைத்த விஜய்… உலகளாவில் லியோ வசூல் இவ்வளவா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

மேலும், சூர்யாவை ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் சூர்யாவை நடிக்கவைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். எனவே, இயக்கும் படங்களை எல்.சி.யூ என ரசிகர்கள் சொல்ல துவங்கினர். அதன்பின் அவர் மீண்டும் விஜயை வைத்து லியோ என்கிற படத்தை துவங்கினார். இந்த படத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு துவங்கியது.

இந்த படம் துவங்கியபோதே இது 2005ம் வருடம் ஹாலிவுட்டில் வெளிவந்த A History of Violence என்கிற படத்தின் ரீமேக் என இணையத்தில் செய்திகள் கசிந்தது. ஆனால், லோகேஷ் தரப்போ அல்லது தயாரிப்பாளர் தரப்போ இதுபற்றி எங்கேயும் பேசவில்லை. இப்போது படம் வெளியாகி தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது. பல யுடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்தபோதும் லோகேஷ் இதை சொல்லாமல் தவிர்த்தார்.

இதையும் படிங்க: லியோவில் மகனாக நடித்தது இந்த சர்ச்சை நடிகையின் மகன் தானா..! இது என்ன புது கதையா இருக்கு..!

A History of Violence படம் பார்த்தவர்களுக்கு அந்த படத்தின் சாயல் லியோவில் இருப்பதை நன்றாக உணரமுடியும். சரி முறையாக அப்படத்தின் உரிமையை வாங்கியிருப்பார்கள் என பலரும் நினைத்தனர். ஆனால், அந்த படத்தின் உரிமையை வாங்கவே இல்லையாம். படத்தின் டைட்டில் கார்டில் A History of Violence படத்தை இன்ஸ்பிரேஷனாக வைத்து எடுக்கப்பட்டது என்று மட்டும் போடப்பட்டிருந்தது.

உண்மையில் லோகேஷ் அந்த கதைக்கு வேறு திரைக்கதைதான் அமைத்திருக்கிறார். ஆனாலும், முறையாக உரிமையை வாங்கியிருக்கவேண்டும் என்றே திரையுலகினர் பலரும் சொல்கிறார்கள். பொதுவாக ஒரு ஆங்கில படத்தை தழுவி எடுத்தாலும் இயக்குனர்கள் அதை வெளியே சொல்வது இல்லை என்பது பல வருடமாக தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இதனால்தான் லியோ படத்தில் நடிக்கவில்லை!.. ரிலீஸுக்கு பின் உண்மையை சொன்ன விஷால்…

 

Related Articles

Next Story