More
Categories: Cinema News latest news

கும்பலா உட்கார்ந்து கள்ளக்காதல் பத்தி பேசும் பிக் பாஸ் டீம்!.. அன்பு கேங் அம்மாவை காணோமே?

ரியோ ராஜுக்கு கடந்த ஆண்டு வெளியான ஜோ படம் ஹிட் அடித்த நிலையில், ரொம்ப நாள் கழிச்சு பிக் பாஸ் சீசன் 4 அன்பு கேங் ஒன்றாக மீட் செய்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது. ரியோ ராஜை சுற்றி பிக் பாஸ் முன்னாள் போட்டியாளர்கள் அமர்ந்து கொண்டு கள்ளக்காதல் பற்றி பேசும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக அட்ராக்ட் செய்து வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரியோ ஒரு சில படங்களில் நடித்தாலும் அது எதுவும் அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. ஆனால், கடந்த ஆண்டு வெளியான ஜோ திரைப்படம் ரியோ ராஜுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாகவே மாறிவிட்டது.

Advertising
Advertising

இதையும் படிங்க: இன்னைக்கு இருக்குற இடத்தை விட இன்னும் பெருசா ஆசைப்படுவேன்!.. லவ்வர் மணிகண்டன் ஓபன் டாக்!

பிக் பாஸ் வீட்டில் ரியோவுடன் நண்பர்களாக இருந்த கேபி, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், சோமசேகர் உள்ளிட்ட அன்பு கேங் ஒன்றாக கூடி ஒரு படத்தில் விவேக் சீரியல் கதை என கள்ளக்காதல் கதையை எடுக்கும் காமெடி காட்சியில் வரும் சீனை வைத்து ஒன்றாக காசிப் பேசுவது போல ரியோவை சூழ்ந்து கொண்டு ரவுண்டு கட்டி பேசிய வீடியோவை தற்போது வெளியிட்டு வைரலாக்கி உள்ளனர்.

ரம்யா பாண்டியன், ஆரி அர்ஜுனன் உள்ளிட்ட பலர் அதற்கு லைக் போட்டு, கமெண்ட்டுகளையும் குவித்துள்ளனர். ஆனால், எங்கே அன்பு கேங்கின் அன்னை அர்ச்சனாவை காணோமே என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: லேட்டாகும் தலைவர் 171?.. கப்புனு பொண்ணு கையைப் புடிச்சு லோகேஷ் கனகராஜிடம் கொடுத்த கமல்ஹாசன்!..

ரியோ ராஜ் இனிமேல் தொடர்ந்து ஜோ மாதிரி நல்ல படங்களை தேர்வு செய்து வெற்றி கொடுப்பார் என்றும் பிக் பாஸ் நடிகர்கள் தான் நாளைய தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் என கவின், ஹரிஷ் கல்யாண், ரியோ ராஜ் என வரிசை கட்டி மாஸ் காட்டும் பிரபலங்கள் பெயரையும் பட்டியலிட்டுள்ளனர்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யுங்க..

https://www.instagram.com/reel/C3AXe-dSW9R/?utm_source=ig_web_copy_link

Published by
Saranya M