More
Categories: latest news

ஸ்வீட் ஹார்ட் படத்தில் அந்த மாதிரியான காட்சிகள்!.. ரியோ ராஜின் மனைவியின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

ரியோ ராஜ் 2011ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடரின் மூலம் தன் திரையுலக பயணத்தை தொடங்கினார். அதைத்தொடர்ந்து அவர் சன் மியூசிக்கில் விஜேவாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். விஜேவாக ரியோ பல பெண் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருந்த சரவணன் மீனாட்சி சீரியலில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

ரியோ ராஜின் கடின உழைப்பால் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பும் கிடைத்தது. இந்த படம் பெரிதாக வரவெற்பை பெறாததால் தன்னை இன்னும் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று பிக்பாஸ் 4ல் போட்டியாளராக பங்கேற்று பல ரசிகர்களை கவர்ந்தார்.

#image_title

மேலும் ரியோ ராஜின் நடிப்பில் வெளியான ஜோ திரைப்படம் ஃப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அதை தொடர்ந்து நிறம் மாறும் உலகில், ஃப்ளான் பண்ணி பன்னனும் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

கடந்த வாரம் யுவன் சங்கர் ராஜா தயாரித்து சுகுமார் இயக்கி ரியோ ராஜ் நடிப்பில் வெளியான ஸ்வீட் ஹார்ட் படம் திரையரங்குகளை பிஸியாக வைத்து வருகிறது. லவ் ஸ்டோரி நிறைந்த இப்படத்தில் கோபிகா ரமேஷ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

தற்போது ரியோ ராஜ் அளித்த பேட்டியில், இப்படத்தின் புரமோசனுக்காக மொட்ட மாடி பார்ட்டியில் நானும் சித்துவும் பிளான் பண்ணி யுவன் சங்கர் ராஜாவை அழைத்து வந்து செம்ம ஃபன் பண்ணோம். ஸ்வீட் ஹார்ட் படத்தில் ஹீரோயின் கோபிகா ரமேஷ் உடன் படு நெருக்கமான காட்சிகளில் நடித்ததை பார்த்து என் மனைவி பொசசீவ் ஆகிட்டாங்க.. அப்புறம் இது படத்துக்காகத்தானே என நினைத்து ஒகே ஆகிடாங்க, மேலும் அப்படத்தில் இருந்த ஆசிரம காட்சிகள் நியாயமானதாக இருந்தது என பாராட்டினார் என்று ரியோ ராஜ் கூறியுள்ளார்.

ஜோ வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து பல படங்களில் ரியோ ராஜ் ஹீரோவாக நடித்து வருகிறார். கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ஆண் பாவம் பொல்லாதது படத்திலும் இவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Saranya M