வாரிசு பட நடிகையை தனியறைக்கு அழைத்துச் சென்ற பிரபல நடிகர்… இவ்வளவு ஓப்பனாவா நடந்துக்குறது!!
1970, 80களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் ஜெயசுதா. இவர் தமிழில் “குல கௌரவம்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து தமிழில் “அபூர்வ ராகங்கள்”, “நினைத்தாலே இனிக்கும்” ஆகிய திரைப்படங்களில் நடித்தார். மேலும் சமீபத்தில் வெளியான “வாரிசு” திரைப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில் நடிகை ஜெயசுதாவை பிரபல பாலிவுட் நடிகரான ரிஷி கபூர் தனி அறைக்கு அழைத்துச் சென்ற சம்பவம் குறித்து ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது 1973 ஆம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் பிரபல பாலிவுட் நடிகரான ரிஷி கபூரை வைத்து ஹிந்தியில் ஒரு படம் தயாரிக்க முடிவு செய்தது. அதன்படி மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்து அவருக்கு கதை சொன்னார்களாம். அத்திரைப்படத்தை ஏவிஎம் சகோதரர்களில் ஒருவரான ஏவிஎம் குமரன் இயக்குவதாக இருந்ததாம். மேலும் அத்திரைப்படத்தில் ஜெயசுதா கதாநாயகியாக நடிப்பதாகவும் இருந்ததாம்.
ஜெயசுதாவின் போட்டோ இருந்தால் பார்க்கலாமா என்று ரிஷி கபூர் கேட்டிருக்கிறார். அதற்கு அவர்கள், “நீங்கள் சென்னைக்கு வாருங்கள். நேரிலேயே காட்டுகிறோம்” என கூறியிருக்கிறார்கள்.
அதன் பின் சென்னையில் ஒரு விழாவில் கலந்துகொள்ள வந்த ரிஷி கபூருக்கு ஜெயசுதாவை நேரில் அழைத்து வந்து காட்டினார்கள். அப்போது ரிஷி கபூர், ஜெயசுதாவுடன் தனியாக பேசவேண்டும் என்று கூறினாராம். இதனை கேட்டதும் ஜெயசுதா ஷாக் ஆகிவிட்டாராம்.
எனினும் அவர்கள் அலுவலகத்தில் ஒரு ஏசி அறை இருந்திருக்கிறது. ஏவிஎம் சகோதரர்கள் ஜெயசுதாவிடம் “நீ தைரியமா உள்ள போ, எதாவது அசம்பாவிதம் நடந்துச்சுன்னா குரல் கொடு. நாங்க வெளியிலதான் நிப்போம்” என கூறியிருக்கிறார்கள்.
அதன் பின் ஜெயசுதாவும் ரிஷி கபூரும் அந்த அறைக்குள் சென்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினார்களாம். அதன்பின் வெளியே வந்த ரிஷி கபூர், அவர்களிடம் எதுவும் சொல்லாமல் மும்பைக்கு கிளம்பி போய்விட்டாராம். அதன் பின் சில நாட்களில் ரிஷி கபூர், “ஜெயசுதாவுடன் என்னால் நடிக்க முடியாது. அதற்கு பதில் சுலக்சனா பண்டித்தை நடிக்க வையுங்கள்” என கூறினாராம். அதற்கு ஏவிஎம் நிறுவனத்தார் முடியாது என சொல்லிவிட்டார்களாம்.
உடனே ரிஷி கபூரும் “அப்படி என்றால் என்னாலும் நடிக்க முடியாது” என கூறிவிட்டாராம். மேலும் ஏற்கனவே ரிஷி கபூர், தான் வாங்கியிருந்த ரூ.50,000 அட்வான்ஸையும் திருப்பித் தரவில்லையாம். ரிஷி கபூர், பிரபல பாலிவுட் பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூரின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ் சினிமாவில் பாலியல் அத்துமீறல்? பகீர் தகவலை பகிர்ந்த பிரபல சீரீயல் நடிகர்… அடச்சே!!