பல துறைகளிலிருந்தும் சினிமாவுக்கு வருவார்கள். ஆனால், மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக்கொண்டு குத்துச்சண்டை வீராங்கணையாக கலக்கியவர் ரித்திகா சிங் சினிமாவுக்கு வந்ததுதான் ஆச்சர்யம். அதற்கு காரணம் இயக்குனர் சுதாகொங்கரா. தனது இறுதிச்சுற்று கதைக்கு நாயகியை தேடிவந்தபோது கிடைத்தவர்தான் ரித்திகா.

சில நடிகைகள் முதல் படத்திலேயே அசத்தலாக நடித்துவிடுவார்கள். அதில் ஒருவர்தான் ரித்திகா. இறுதிச்சுற்று படத்தில் குத்துச்சண்டை வீராங்கணையாகவே நடித்திருந்தார். மாதவனுடன் போட்டி போட்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். எனவே, இந்த படம் ஹிட் அடித்தது.

இந்த படம் வெற்றி அடைந்ததால் இதே கதை தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் உருவாக்கப்பட்டது. எல்லாவற்றிலும் ரித்திகா சிங்கே நடித்தார். எல்லா மொழியிலும் இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்திற்கு பின் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்தார்.

அதன்பின், சிவலிங்கா, ஓ மை கடவுளே, கொலை என சில படங்களில் நடித்தார். இதில் ஓ மை கடவுளே படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது. இப்போது, ரஜினி நடித்து வரும் வேட்டையன் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். ஸ்டோரி ஆப் திங்ஸ் என்கிற வெப் சீரியஸிலும் நடித்திருந்தார்.

சினிமாவில் எப்படியாவது தனக்கென ஒரு இடத்தை பிடிக்க ஆசைப்படும் ரித்திகா கவர்ச்சியான உடைகளில் கட்டழகை காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் காஜி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது.

