நூடுல்ஸ் மண்டை ஹேர்ஸ்டைலுடன் ஹாட் லுக் கொடுத்த ரித்திகா

நடிகர் மாதவன் நடித்த 'இறுதி சுற்று' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். டெல்லியை பூர்வீகமாகக்கொண்ட இவர் நிஜமாகவே ஒரு குத்துச்சண்டை வீராங்கனை ஆவார். இவரின் முதல் திரைப்படமே இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றியடைந்து, இவருக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது மட்டுமல்லாமல் தேசிய விருது பெற்றது.

ritika singh
முதல் படத்திற்குப் பின் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஆண்டவன் கட்டளை என்ற படத்தில் நடித்தார். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின் சிவலிங்கா, ஓ மை கடவுளே ஆகிய படங்களில் மட்டுமே நாயகியாக நடித்திருந்தார்.
முதல் படத்திலே தேசிய விருது பெற்றதால் தமிழில் எப்படியாவது முன்னணி நடிகையாகிவிடலாம் என நினைத்த இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நூடுல்ஸ் மண்டை என்று ரசிகர்களால் அழைக்கபடும் சமீபகாலமாக சமூக வலைதள பக்கத்தில் தாறுமாறு கவர்ச்சி காட்டி புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.

ritika singh
சமீபத்தில் கருப்பு உடையில் கையை தூக்கி போஸ் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் கையை தூக்கியதும் சகலமும் தெரியுதே என கமெண்ட் செய்து வருகின்றனர்.