Connect with us
saravana store

குலுங்க குலுங்க நடனமாடிய ரித்திகா சிங்.. கொண்டாடும் ரசிகர்கள்!!

ritika singh

Cinema News

குலுங்க குலுங்க நடனமாடிய ரித்திகா சிங்.. கொண்டாடும் ரசிகர்கள்!!

குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்த ரித்திகா சிங்கை கடந்த 2016ம் ஆண்டு இறுதிச்சுற்று படத்தின் மூலம் நடிகையாக சினிமா உலகிற்கு அழைத்து வந்தார் சுதா கொங்கரா. மாதவன் ஹீரோவாக நடித்திருந்த இப்படம் தமிழ், ஹிந்தி இரண்டு மொழியிலும் ஒரே நேரத்தில் வெளியானது.

முதல் படத்திலே தேசிய விருது மற்றும் ஃபிலிம் பேர் விருது வென்று அசத்தினார் ரித்திகா சிங். இப்படம் தெலுங்கில் குரு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. வெங்கடேஷ் ஹீரோவாக நடித்த இப்படத்திலும் இவரே நாயகியாக நடித்தார். தெலுங்கிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இதையடுத்து மூன்று மொழியிலும் இவருக்கு ஒரு மார்க்கெட் உருவானது. தொடர்ந்து தமிழில் சிவலிங்கா, ஆணடவன் கட்டளை, ஓ மை கடவுளே ஆகிய படங்களில் நடித்தார். தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்திருந்தார். ஆனால் இவர் எதிர்பார்த்த அளவிற்கு அதிக அளவில் படங்கள் கிடைக்கவில்லை.

ritika singh

ritika singh

ஹிந்தியிலும் சுத்தமாக வாய்ப்புகள் இல்லை. இதையடுத்து கவர்ச்சி பக்கம் தாவினார் அம்மணி. சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக கவர்ச்சியான படங்களை பதிவேற்றி வந்தார். தற்போது இன்ஸ்ட்டாவில் தான் டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் இறுக்கமான உடையில் அவர் டான்ஸ் ஆடியுள்ளார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ஏன் என்பதற்கான காரணம் வீடியோவை பார்த்தால் உங்களுக்கே தெரியும்.

வீடியோவை இங்கே காணலாம்

செய்திகளை உடனுக்குடன் பெற @ Google News கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள். Also Follow @ YouTube, Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram
Continue Reading
To Top